கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Fengal Cyclone Damage: Rs 2000 for Ration Card - Relief announced by Tamilnadu Govt - Full Details



பெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணம் - முழு விவரம்


Fengal Cyclone Damage: Rs 2000 for Ration Card - Relief announced by Tamilnadu Govt - Full Details


DIPR - P.R.NO-2110 - Hon'ble CM Press Release - Fengal Cyclone - Relief Announcement - Date 03.12.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நிவாரணம் அறிவிப்பு:


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ.2,000 நிவாரணம்.


🔴சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 நிவாரணம்


🔴இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்


🔴சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம்


🔴பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 நிவாரணம்


🔴மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 நிவாரணம்


🔴எருது, பசு, கால்நடை உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 நிவாரணம்


🔴வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்


🔴கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்


🔴மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்


🔴மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும்


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


#CycloneFengal #CMMKStalin


பெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்


தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.


பின்னர், பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:"

 

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்,


* சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும்,


* முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,


* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்,


* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும்,


* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்,


* எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும்,


* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்,


* அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்,


* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்,


* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops