கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Meeting with TETOJAC Coordinators Dr. Ramadoss on 30-01-2025







30-01-2025 அன்று TETOJAC ஒருங்கிணைப்பாளர்கள் திண்டிவனத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுடன் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்திப்பு


Meeting with TETOJAC Coordinators Dr. Ramadoss on 30-01-2025


பா.ம.க. தலைமை நிலையச் செய்தி

டிட்டோ ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர் அய்யா அவர்களுடன் சந்திப்பு


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில்   சந்தித்துப் பேசினார்கள்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம்,  ஊதிய முரண்பாடுகளைக் களைதல்,  ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல்,  உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல்,  ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை,  அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக  வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை  வலியுறுத்த வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


கடந்த காலங்களில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து  குரல் கொடுத்து வருவதற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஆசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


அவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை  என்று கூறிய மருத்துவர் அய்யா அவர்கள்,  ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்தார்.


இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோ ஜாக்)  ஈ. இராஜேந்திரன், கே.பி.ரக்‌ஷித், அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், சி.சேகர், சு.குணசேகரன், கோ.காமராஜ்,  சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான்வெஸ்லி, சமூக முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு

  21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு Deepavali Next Day Holiday G.O. No. 581 , Dated 17.10.2025 த...