கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's teaching community needs to change their mindset



  தமது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இன்றைய ஆசிரியர் சமூகம்


Today's teaching community needs to change their mindset


மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சார்ந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


*பாலியல் சார்ந்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


எனினும் 

ஆசிரியர்கள், மாணவர்களுக்கான உறவு என்பது கற்றல் கற்பித்தல் உடன் நின்றுவிடாமல் ஒழுக்கம் சார்ந்த கண்டிப்பையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.


இன்றைய கைபேசி இணைய  உலகத்தில் படிப்பைத் தவிர மற்ற பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களின் மனம் அலைந்து கொண்டிருத்தலும்,


குறிப்பிட்ட மதிப்பெண் இருந்தால்

மட்டுமே கல்லூரியில் 

இடம் கிடைக்கும் என்கின்ற சூழல் இல்லாமல்

எந்த மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது 

ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்கின்ற நிலை இருப்பதாலும்,


கடந்த தலைமுறையான கண்டிப்பான பெற்றோர்களிடம் குழந்தைகளாக வளர்ந்து, இன்றைய பெற்றோர்களாக இருக்கும் தலைமுறையினர் தாங்கள் பட்ட கஷ்டங்களை, கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தைகள்  படக் கூடாது என்கின்ற மனநிலையில் பெற்றோர்களும் இருப்பதாலும்,


படிப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடையங்களில் கட்டுப்பாடுகள் இன்றி இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.


முதன்மை கல்வி அலுவலர் தேர்ச்சி சதவீதம் உயர்த்த சொல்கிறார் என்றோ

அல்லது 

நீங்கள் வளர்ந்த சூழலை மனதில் வைத்து இன்றைய மாணவர் இடத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்டாலோ

அதைக் கூட சிக்கலாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. 


எனவே

மேற்கண்ட சூழல்களில்,  இன்றைய காலகட்டம் இருப்பதால்,

ஆசிரியர்கள் மிகுந்த உச்சபட்ச எச்சரிக்கையுடன் மாணவர்களை கையாள வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.


எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் விட  மானமும், கௌரவமும் முக்கியமானது.


 ஏனெனில் இன்றைய சமூக ஊடகங்களும் உங்களை வீழ்த்த மட்டுமே கூட்டம் கூட்டமாக வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆசிரியர்களே!


 தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள்:


1) ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை  ஈகோ இல்லாமல், பணித் தொகுதி பாரபட்சம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


2) ஆசிரியர்களுக்கிடையேயான போட்டிகளை தீர்க்க (தனிப்பட்ட விடயங்களுக்காக) சாதி, மதம், உள்ளூர் என ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு மற்றோர் ஆசிரியருக்கு எதிராக தூண்டி விடுதல், போன்ற எதிர்மறையான சிந்தனைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


3) ஒரு ஆசிரியருக்கு எதிராக உண்மைக்கு புறம்பான சிக்கல் வரும் போது மற்ற அனைத்து ஆசிரியர்களும் துணையாக நிற்க வேண்டும்.


4) பெண்கள் பள்ளிகளில் ஆய்வகம், வகுப்பறைகள் உட்பட எந்தவொரு சூழலிலும் மாணவிகளை தனியாக சந்திக்கும் சூழலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குறைந்த பட்சம் மூன்று அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவிகளை சந்திக்க சொல்லி அறிவுரை வழங்கி விடவும்.


5) இருபாலர் பள்ளியில் மாணவர்கள் உடன் வைத்துக் கொள்ளவும், ஆய்வகங்களுக்கு முதலில் மாணவர்களும் இரண்டாவதாக மாணவிகளும் உள்ளே வர வேண்டும் என்றும்,

வெளியேறும் போது முதலில் மாணவிகள் வெளியேற வேண்டும் இரண்டாவதாக மாணவர்கள் வெளியேற வேண்டும் போன்ற பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டும்.


6) மேற்கண்ட விடயம் பெண் ஆசிரியர் சகோதரிகளுக்கும் பொருந்தும்.

கவனம் செலுத்த தவறாதீர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025 : 11 CEOs Transfer & 26 DEOs Promotion as CEOs

  11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி அரசா...