கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கான தகவல்



 தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கு ஒரு தகவல்


காரில் கண்ணாடிகள் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் தற்போதய வாகனங்கள் வெகு எளிதாக 120 அல்லது 140KM/Hr மேல் பயணிக்கும் வகையில் இருக்கும் போது நம்மையும் அறியாமல் 100 அல்லது 120KM/Hr செல்லும் போது மெதுவாக செல்வதைப் போல ஒரு மாயத் தோற்றம் உண்டாகும். கூடவே பயணிக்கும் மற்ற வாகனங்களும் உங்களது வேகத்தை ஒத்தோ அல்லது உங்களை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும்போதும் உங்களது வாகனம் மெதுவாக செல்வதைப் போலவே ஒரு மாயத் தோற்றம் உண்டாகும். இதை Motion induced blindness என்று கூறுவார்கள்.


எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களது வாகனத்தை 100KM/Hrல் ஓட்டும் போது நீங்கள் ஒரு செகண்டிற்கு 27 மீட்டர்கள் கடந்து விடுவீர்கள். உங்களுக்கு முன்னே போகும் வாகனம் திடீரென்று பிரேக் பிடிக்கும் போது அந்த நிகழ்வை உங்களது மூளை உள்வாங்கி பிரேக்கை அழுத்த காலுக்கு உத்தரவு பிறப்பித்து காலும் பிரேக்கை அழுத்தி பிரேக் அதற்குண்டான வேலையை செய்து வாகனத்தை நிறுத்த ஆரம்பிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் உங்களது வாகனத்திற்கும் முன்னே செல்லும் வாகனத்திற்குமான இடைவெளி. போதுமான இடைவெளி இல்லாமல் வாகனத்தை செலுத்தும் போது விபத்து நிச்சயம். இந்த motion induced blindness தலைவலியினால் நானும் எனது காரில் 100 KM/Hr மேல் செல்லும் போது பீப் சத்தம் வருமாறு வைத்துள்ளேன். அந்த வேகக்கட்டுபாட்டு பீப் சத்தம் மிக முக்கியமான ஒன்று. இதுவரை நீங்கள் அதை வைக்காமல் இருந்தால் அவரவரது ஓட்டும் திறமைக்கு தக்கவாறு 80Km/Hr அல்லது 100KM/Hr மேல் மிகாமல் வைத்துக் கொள்ளுங்கள். பாரதத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது 100 KM/Hr மேல் பயணிப்பது அபாயகரமானது. 


அதுபோல் அடுத்த தலைவலி சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள். ஒரு மருத்துவ தகவல் சொல்வது, நீங்கள் ஒரு நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக சாலையில் கவனம் செலுத்த முடியாது என்பது. ஒரு செகண்டிற்கு 27 மீட்டர்கள் கடக்கும் வேகமும்  உங்களது ஒரு நிமிட நேரம் மட்டுமே கவனம் செலுத்த முடிகிற தன்மையும் சொல்லும் செய்திதான் சாலை விபத்துக்கள். 

 

 சென்னை - பங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கமாக பயணிப்பதால் நிறைய பேரின் வேகத்தை பார்த்து மலைத்திருக்கிறேன். அதுவும் சென்னை - பங்களூர் தேசிய நெடுஞ்சாலை Non Access controlled அதாவது உள்ளே வர தடை செய்யப்பட்ட சாலை இல்லை. எந்த நேரமும் மனிதர்கள் முதற்கொண்டு கால்நடைகள் வரை குறுக்கே வர வாய்ப்புண்டு. அதுபோல் நிறைய கனரக வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சாலையில் நீங்கள் 100KM/Hrல் ஓட்டுவதே கடினம். சில பேர் 150 KM/Hr க்கும் மேல் இருக்கும் போல வேகம், அவ்வளவு வேகத்தில் பயணிக்கிறார்கள். அதுவும் குடும்பத்தோடு போகும் போதும் இதே வேகம்தான். ஈஸ்வரன்தான் அந்த குடும்பங்களை விபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். 


Speed thrills but kills - அனைவருக்கும் இந்த வாக்கியம் தெரியும். வேகத்தின் மேலுள்ள காதல் நம்மை வேதனையில்தான் ஆழ்த்தும். 

🙏



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கான தகவல்

 தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கு ஒரு தகவல் காரில் கண்ணாடிகள் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் தற்போதய வாகனங்கள் வெகு எ...