கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

‘அகல்விளக்கு’ திட்டம் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



 ‘அகல்விளக்கு’ திட்டம் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 


‘‘9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் வரும் சிக்கல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இணையதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அகல்விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படும்’’ என 2024-25 பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தோம்.



இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகல்விளக்கு திட்டத்தை இன்று தொடங்கிவைத்தோம். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் @regupathymla அவர்களும் @SMeyyanathan அவர்களும் வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டு மாணவிகளுக்கு வழங்கினார்கள்.


“பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’ அது போன்றதே ஆண்களால், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதும்!” என்ற தந்தை பெரியாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, மாணவிகள் நம்பிக்கையோடும் கல்வியைத் துணை கொண்டும் விடுதலைப் பெற வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விழிப்போடு செயல்பட வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேடு குறித்த காணொளி

 “அகல்விளக்கு” திட்ட விளக்க கையேடு தகவல்கள் குறித்த காணொளி  Video on the “Akal Vilakku” project explanatory manual information  >>>...