கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 03.12.2025

கிழமை:- புதன்கிழமை


 

திருக்குறள்:


பால்:- பொருட்பால்

இயல்:- அரணியல்

அதிகாரம்:- நாடு


*குறள் 738:*


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. 


*விளக்க உரை:*


நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.


*பழமொழி :*


sweat today, shine tomorrow. 


இன்று சிந்தும் வியர்வை, நாளை ஒளியாக மாறும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.


2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.


*பொன்மொழி :*


உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் யாரும் தனக்கு எஜமானனாக முடியாது. எனவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் - பரூச் ஸ்பினோஸா


*பொது அறிவு :* 


01.மிகப் பழமையான கணிதம் பற்றிய தமிழ் நூல் எது?



கணக்கதிகாரம்- Kanakathikaram


02. பரத்பூர் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?


ராஜஸ்தான்-Rajasthan


*English words :*


Bill  -  total amount you need to pay


receipt-the paper that proves you paid


*தமிழ் இலக்கணம்:*


 ஓர், ஒரு எது எங்கே வரும்?

உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் ஓர் பயன்படுத்த வேண்டும் 

எ. கா: 

1. ஓர் அரசன்

2. ஓர் ஏணி

3. ஓர் ஆடு

4. ஓர் உரல்

5. ஓர் ஒட்டகம்

உயிர்மெய் எழுத்துக்களுக்கு பின்னால் வரும் சொற்களுக்கு முன்னால் ஒரு பயன் படுத்த வேண்டும் 

1. ஒரு பறவை

2. ஒரு தாமரை


3. ஒரு மண்டபம்

4. ஒரு வேடன்

5. ஒரு மலர்


*அறிவியல் களஞ்சியம் :*


 மூளையானது முள்ளந்தண்டு வடம் மூலம் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது, முள்ளந்தண்டு நரம்புகள் மூளையிலிருந்து தூண்டுதல்கள் மற்றும் செய்திகளை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது.



இருப்பினும், உடலுடன் நேரடியாக இணைக்கும் பன்னிரண்டு மண்டை நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் தலை மற்றும் கழுத்தின் தசை மற்றும் உணர்திறன் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன.


இவற்றில் ஒன்று ட்ரைஜெமினல் நரம்பு


*டிசம்பர் 03*


*பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்*


உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.



1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.


உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


*நீதிக்கதை*


 *மாறுதல் முக்கியம்*




ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். 


ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்து கேட்டார். தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?


பையன் சொன்னான் தங்கம் என்று.


அவர் கேட்டார் பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?


பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள். 


நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் . உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 


இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!


வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!


*இன்றைய செய்திகள்*


03.12.2025


⭐வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் வெள்ளம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை


⭐தமிழகத்தின் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


⭐தண்டையார்பேட்டையில் அரசு அச்சகப் பணியாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.


*Today's Headlines*


⭐The District Collector has warned the public that there is a risk of flooding at the check dam due to the increase in water inflow to the Vaigai Dam.


⭐The Tamil Nadu government has signed 158 agreements to improve Tamil Nadu's industry.


⭐ The Chief Minister inaugurates new residences for government printing staff in Thandaiyarpet.


 *SPORTS NEWS* 


🏀The 2nd test match between Australia and England begins on the 4th. The Australian team won the first test match.



Home Towels for Bath Large Size | Microfiber Towels for Bath | Towel Set of 2 | 400 GSM | 70 x 140 cm | Pink and Blue | Bath Towels for Men, Women & Kids | Gym Towel | Perfect for Everyday Use


https://amzn.to/4pfmRqE




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியக் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு - அரசின் மௌனத்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி

 ஓய்வூதியக் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு - அரசின் மௌனத்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி - நாளிதழ் செய்தி