கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அறிவு திறன்மிக்க ஆசிரியர்களை தேடுகிறோம்: கபில் சிபல் பேச்சு


அறிவு திறன்மிக்க ஆசிரியர்களை தேடுகிறோம்: கபில் சிபல் பேச்சு
                "ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவதற்கு, அறிவுத்திறன் மிகவும் அவசியம்'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார். டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:ஆசிரியப் பணி என்பது மிகவும் மேன்மையான பணி. இந்த பணியில் ஈடுபடுவோர், சிறப்பாகச் செயலாற்ற வேண்டுமெனில், அறிவார்ந்த திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளின் கல்வியைப் பற்றிப் பேச வேண்டிய சூழலில், ஆசிரியர்களின் கல்வித் திறன் பற்றிப் பேசுகிறோம். ஆசிரியர்களாக இருப்பவர்கள், தங்களுக்குரிய சிறப்பான கல்வித் திறனைப் பெறாத சூழல் காணப்படுகிறது. அதை மாற்றியாக வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஆசிரியப் பணி விவகாரத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. தரமான கல்வியைக் கற்பிக்க, ஆசிரியப் பணியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கபில் சிபல் பேசினார்
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹15,000 fine for shop selling overpriced juice - District Consumer Court

18 ரூபாய் அதிக விலைக்கு ஜூஸை விற்பனை செய்த கடைக்கு ₹15,000 அபராதம் - மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திருவள்ளூர்: ₹125 மதிப்புள்ள கொய்யா ஜூஸை ₹1...