கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.
ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CEOs retire - Incharge officers - DSE Proceedings

     மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 31-03-2025 பிற்பகல் பணி ஓய்வு - கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் ...