கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Details of the best mobile phones, as of January 2026

 


ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்


Details of the best mobile phones, as of January 2026


2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 2026 நிலவரப்படி), சந்தையில் உள்ள சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள் இதோ. உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ப சிறந்த போனைத் தேர்ந்தெடுக்க இந்த பட்டியல் உதவும்.


1. சிறந்த பட்ஜெட் போன்கள் (₹15,000 - ₹25,000)

இந்த விலையில் அதிக வசதிகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இவை சிறந்தவை.

  • Realme 16 Pro: ஜனவரி 6, 2026 அன்று அறிமுகமாகிறது. இதில் 200MP கேமரா மற்றும் 7000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ₹24,000 முதல் இருக்கலாம்.

  • Redmi Note 15 5G: இதுவும் ஜனவரி 6-ல் வெளியாகிறது. 108MP கேமரா, மெல்லிய டிசைன் (7.35mm) மற்றும் Snapdragon 6 Gen 3 சிப்செட் கொண்டது. இதன் விலை சுமார் ₹18,000 - ₹22,000 வரை இருக்கும்.

  • Realme P4 5G: ₹17,999 விலையில் இது ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் போனாகக் கருதப்படுகிறது. https://amzn.to/3LkjrEl

  • Samsung Galaxy M17 5G: நீண்ட நேர பேட்டரி பேக்கப் (6000mAh) மற்றும் சாப்ட்வேர் அப்டேட்கள் விரும்புவோருக்கு இது சரியான தேர்வு (சுமார் ₹15,000). https://amzn.to/49ofM0s


2. நடுத்தர விலை மற்றும் கேமிங் போன்கள் (₹25,000 - ₹45,000)

வேகம் மற்றும் கேமிங் வசதிக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு இவை ஏற்றவை.

  • OnePlus Turbo 6: Snapdragon 8s Gen 4 சிப்செட் மற்றும் 165Hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது கேமிங் பிரியர்களுக்கான சிறந்த தேர்வு. விரைவில் வெளியாக உள்ளது.

  • Nothing Phone (3a) Pro: தூய்மையான மென்பொருள் (Nothing OS) மற்றும் சிறப்பான டிசைன் விரும்புவோருக்கு இது பிடிக்கும். https://amzn.to/4jktlCt

  • Vivo T4 Pro: போர்ட்ரெய்ட் புகைப்படங்கள் மற்றும் ஸ்டைலான டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். https://amzn.to/4jk1aDK


3. சிறந்த பிரீமியம் போன்கள் (₹60,000-க்கு மேல்)

சிறந்த கேமரா, AI வசதிகள் மற்றும் பவர்ஃபுல் சிப்செட் கொண்டவை.

மொபைல் மாடல்முக்கிய வசதிகள்ஆரம்ப விலை (சுமார்)


Samsung Galaxy S25 Ultra


200MP கேமரா, S-Pen, Snapdragon 8 Elite
https://amzn.to/4pk7QTE

₹1,27,999
OnePlus 15


7300mAh பேட்டரி, 120W சார்ஜிங், Sony IMX906 சென்சார்
https://amzn.to/4aCuvag

₹72,999
Vivo X300 Pro


200MP + 50MP + 50MP கேமராக்கள், Dimensity 9500 சிப்

https://amzn.to/4q4Ntv6

₹1,09,999

கவனிக்க வேண்டிய சில அம்சங்கள்:

  • AI வசதிகள்: 2026-ல் வரும் பெரும்பாலான போன்கள் புகைப்படங்களைத் திருத்துவதற்கும் (AI Editing), நேரடி மொழிபெயர்ப்புக்கும் (Live Translation) பிரத்யேக AI வசதிகளைக் கொண்டுள்ளன.

  • பேட்டரி: தற்போது 7000mAh வரையிலான பெரிய பேட்டரிகள் பட்ஜெட் போன்களிலும் வரத் தொடங்கிவிட்டன.

  • டிஸ்ப்ளே: AMOLED திரைகள் மற்றும் 120Hz/144Hz ரெஃப்ரெஷ் ரேட் இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.




அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி - ரூ.4,00,000க்கும் மேற்பட்ட பரிசுத்தொகை அறிவிப்பு

 


தமிழ்நாடு அரசு - குறள் வார விழா 2026 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறளாசிரியர் மாநாடு - சிறப்பு திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி - ரூ.4,00,000க்கும் மேற்பட்ட பரிசுத்தொகை அறிவிப்பு



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...




குறளாசிரியர் மாநாடு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறளாசிரியர்  மாநாடு- 2026


தமிழ்நாடு அரசு


தமிழ் வளர்ச்சித் துறை 

குறள் வார விழா 2026 

குறளாசிரியர் மாநாடு


சிறப்பு திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி


I) பாடத்திட்டம்


II) பாடத்திட்ட தலைப்புகள்:


+ சமயச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.


+ அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.


மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.


திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை.


+ சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.


திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.


பல்வேறு அறிஞர்களின் உரைகள்.


மொழிபெயர்ப்பு: ஜி.யு. போப், சுந்தரம் தாமஸ்கிட்டோச்சி.


+ குறள் சார்ந்த நூல்கள்:


(எ.கா.) குறளோவியம், குறள்வானம், வாழும் வள்ளுவம் போன்றவை.


பிற்கால இலக்கியம் / திரைப்படங்களில் திருக்குறளின் தாக்கம்.


தமிழ்நாடு அரசும் திருக்குறளும்.


III) வழிகாட்டு நெறிமுறைகள்


அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகளின் படி திருக்குறள் வார விழா 2026 தமிழ்நாடு அரசால் பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா நிகழ்வு வரும் ஜனவரி 21 அன்று திருப்பூரில் நடைபெறவுள்ளது. 38 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 குழுக்கள் வீதம் மொத்தம் 76 குழுக்கள் பங்கேற்கின்றன.


மாவட்ட அளவிலான போட்டி:


மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்து தேர்வு (கொள்குறி வகை) நடத்தி அதில் சிறந்த மதிப்பெண் பெறும் 6 நபர்களை 2 குழுக்களாக இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும்.


மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடத்தில் 09/01/2026 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 02.00 மணிக்கு போட்டியாளர்கள் அனைவருக்கும் தேர்வு தொடங்கப்பட வேண்டும். ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டு சரியாக 03.00 மணிக்கு தேர்வு முடிக்கப்படும்.


போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கைபேசி /ஸ்மார்ட் கைகடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்தக் கூடாது.


போட்டியாளர்களில் எவரேனும் விழி சவால் மாற்றுத்திறனாளி இருந்தால் விதிமுறைகளின் படி எழுத்தாளர் (Scribe) நியமித்து கூடுதல் நேரம் (1 மணி நேரம் 20 நிமிடம்) வழங்கலாம்.


மாநில அளவிலான போட்டி:


இறுதிப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2 அணிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு அணியும் 3 பேர் கொண்ட குழுக்களாக இருக்க வேண்டும். 3 பேர் குழுவில் ஒரு நபர் கட்டாயம் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியராக இருக்க வேண்டும்.


மாநில அளவிலான வினாடி வினா போட்டியானது 21/01/2026 அன்று திருப்பூர் மாவட்டம். அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நான்கு நிலைகளாக நடத்தப்படும் (தொடக்கநிலை, கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்று).


தொடக்க நிலையில் 25 வினாக்கள் (கொள்குறி வகை) கேட்கப்படும். இதில் முதல் 40 இடங்கள் பெறும் அணிகள் காலிறுதியில் பங்கு பெற தகுதி பெறும்.


கால் இறுதி போட்டியில் 50 வினாக்கள் (ஒரு வார்த்தையில் பதில்) கேட்கப்படும்.


அரை இறுதி மேடையில் 4 சுற்றுகளாக நடத்தப்படும். இதில் சிறந்த அணிகள் இறுதிப் போட்டியில் பங்கு பெறும்.


இறுதிப்போட்டி ஆறு அணிகளுக்கு இடையே நடைபெறும். முதல் இடம் பெற்ற அணிக்கு ரூ.1,50,000/- இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.1,20,000/-மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.90,000/- பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற்ற மீதமுள்ள அணிகளுக்கு ஊக்க பரிசாக ரூ.15,000/- வழங்கப்படும்.


தகுதிகள் மற்றும் விதிமுறைகள்:


அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை /அனைத்து நிலை அலுவலர்களும். அரசு / அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொள்ளலாம்.


முதல்நிலைத் தேர்விற்கும் / இறுதிப் போட்டிக்கும் கலந்து கொள்ள வரும் போது அலுவலக அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.


தங்குமிடம் / போக்குவரத்து வசதிகள் போட்டியாளர்கள் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


போட்டியாளர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.


போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்படும்.


போட்டியில் நடுவர் எடுக்கும் முடிவுகளே இறுதியானது.



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...




"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா"? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

 

 "வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா"?  - காத்திருக்கும் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள்


பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை ஜனவரி 3ஆம் தேதி அறிவிப்பார் என்று ஜாக்டோ ஜியோ மற்றும் பிற அமைப்புகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர் 


பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இருந்தது


இதன் தொடர்ச்சியாக அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று  வந்தது 


மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான திரு ககன்தீப்சிங் பேடி அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைத்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த ஆய்வுகளை செய்து அறிக்கையை பெற்றது


தற்போது இன்று ஜனவரி இரண்டாம் தேதி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர்கள் இன்னும் 24 மணி நேரத்தில் நாளை அதாவது ஜனவரி 3 அன்று ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க உள்ளார் என்று கூறியுள்ளனர்


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக மகிழ்ச்சியான கொண்டாட்ட செய்தி வரப்போகிறதா அல்லது தொடர்  வீரியமான போராட்டத்திற்கு வழிவகை செய்யப் போகிறதா என்று தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முதல்வர் அறிவிப்பினை எதிர்நோக்கி உள்ளனர்


அரசியல் அழுத்தம்


தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது


அதனைத் தொடர்ந்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் திமுக கட்சிக்கு வாக்களித்ததாக அப்போது கூறப்பட்டது


எடுத்துக்காட்டாக பல தொகுதிகளில் பெரும்பாலான தபால் ஓட்டுக்கள்  திமுக கட்சிக்கு ஆதரவாக விழுந்தன


மேலும் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரை திமுக கட்சிக்கு வாக்களிக்க அறிவுறுத்தியதாக அப்போது பேசப்பட்டது


தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பெரும் அரசியல் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது


 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நம்பிக்கையை பெற திமுக அரசு நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது


இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் முழுமையாக செயல்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சில மாற்றங்கள் செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்துவது சாத்தியம் என்று அரசு கருதுகிறது


23 ஆண்டுகளுக்கு முன்பு பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டபோது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சி எதிர்த்து கடுமையான போராட்டத்தினை செய்தனர் 


மேலும் எஸ்மா, டெஸ்மா போன்ற பல்வேறு சட்டத்தின் விளைவுகளையும் அனுபவித்தனர். அவ்வாறான கடுமையான போராட்டத்திற்கு தற்போது அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் தயாராகி வருகிறதா என்ற கேள்வியும் ஆட்சியாளர்களிடமும் , பிற அரசியல் கட்சிகளிடமும்  உள்ளது


மேலும் பழைய ஓய்வு ஊதியம் குறித்து பிற அரசியல் கட்சிகள்,  எந்த வாக்குறுதியும் இது வரை அளிக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது


"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா" என்று நாளை முதல்வர் அவர்களின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்


Portronics Clamp M4 Car Phone Holder Stand with 360 Degree Rotation, Strong Grip, Suction Cup Mount, Single Hand Use, Shockproof Build, Mobile Stand for Car (Black)


https://amzn.to/3LgOKzS




சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -



சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே - 


மாண்புமிகு அமைச்சர் உயர்திரு.ஏ.வ.வேலு அவர்களுடன்  ADAF கூட்டமைப்பினர் இல்லத்தில் சந்திப்பு - சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அல்ல சந்திப்பும் செய்தி தெரிவித்தல் என்ற திட்டம் எனவும் 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மேற்கொள்கிறோம் - ADAF அச்சந்திப்புக்கு வாருங்கள் என கூட்டமைப்பு நேரில் அழைப்பு


தோழர்களுக்கு வணக்கம் 


இன்று நம் ADAF கூட்டமைப்பின் மாநில முதன்மை கள அமைப்பாளர்கள் மற்றும் மாநில கள அமைப்பாளர்கள் காலை 9.30 மணி அளவில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை அவரது இல்லத்தில்  சந்தித்தோம். 


அரசு பேச்சுவார்த்தை என்பது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து மேற்கொள்ளப்படுவதை கடைபிடிக்கவில்லை என தெரிவித்தோம். அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை என்பது திட்டமில்லை மாண்புமிகு முதல்வர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்படும் நிலை உள்ளது அடுத்தும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடுகிறார் அதை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டங்களின் மீது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தி அரசு சார்பில் தெரிவிக்க உள்ளோம் எனவும். 

ADAF கூட்டமைப்பை தலைமை்செயலகம் வந்து சந்திப்பில் பங்கேற்கவும் என நேரில் அழைப்பு விடுத்தார். அழைப்பை தொடர்ந்து செல்கிறோம்.

பங்கேற்று விரிவான செய்தி வெளியிடப்படும்.

🙏🏻

தோழமையுடன்


மாநில முதன்மை கள அமைப்பாளர்கள்

ADAF



NIVEA Soft Light Moisturizer, 300 ml | Instant Hydration with Vitamin E & Jojoba Oil | Non-Greasy Cream for Face, Body and Hands | For Smooth, Healthy Skin


https://amzn.to/4s5pHQV




OPS, CPS, UPS வேறுபாடுகள் - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?

 

 

பழைய ஓய்வூதியம் மற்றும் புதிய ஓய்வூதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்  - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?



OPS, CPS, UPS Differences


பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தெளிவாக விளக்குகிறது கீழேயுள்ள பதிவு.


அதன் முழுமையான விவரங்கள் இதோ:


1. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

அமலாக்கம்: மத்திய அரசில் 1.4.2004-க்கு முன் அதாவது 31-03-2004 வரை (தமிழ்நாட்டில் 31-03-2003 வரை மட்டுமே).


யாருக்கு: 2003-க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: கடைசி மாதச் சம்பளத்தில் 50% வரை உறுதியாகக் கிடைக்கும்.


பங்களிப்பு: ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து எவ்விதத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும்.


இதர பலன்கள்: அகவிலைப்படி (DA) உயர்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும்.


சவால்: இது அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.


2. புதிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( NPS / CPS)

அமலாக்கம்: 2003-க்குப் பிறகு (தமிழ்நாட்டில்)


யாருக்கு: 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: இது முதலீடு சார்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் பங்குச்சந்தை லாபத்தைப் பொறுத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது.


பங்களிப்பு: ஊழியர் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். மத்திய அரசு 14% பங்களிப்பு வழங்கும் (தமிழ்நாடு அரசின் பங்களிப்பு தற்போது வரை 10% மட்டுமே) 


இதர பலன்கள்: மத்திய அரசு பணியில் ஓய்வு பெறும்போது 60% தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% மட்டுமே மாத ஓய்வூதியமாக வரும். அகவிலைப்படி உயர்வு கிடையாது. 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் CPS திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்துடன், தனது பங்களிப்பையும் சேர்த்து ஓய்வு பெறும் நாள் அன்று வரை உள்ள தொகைக்கு 7.1% வட்டியுடன் மொத்தமாக வழங்கி விடுகிறது.


சவால்: பங்குச்சந்தை அபாயம் உள்ளது; அரசு ஊழியர்களுக்கு தனது பணமும் சேர்ந்து பறிபோகும் வாய்ப்புள்ளது என்பதால் இதில் துளியும் விருப்பம் இல்லை.


3. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)


அமலாக்கம்: 2024-25 (மத்திய அரசின் முன்மொழிவு).


யாருக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு (மாநில அரசுகள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்).


ஓய்வூதியத் தொகை: உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள்.


பங்களிப்பு: ஊழியர் பணம் பங்களிப்பு செய்ய வேண்டும். அரசு தனது பங்களிப்பைத் தொடரும்.


இதர பலன்கள்: குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


நிலைப்பாடு: இது அரசுக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒரு நடுத்தர சமரசத் திட்டமாக இது கருதப்படுகிறது. முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இறுதியாக : தமிழ்நாட்டில் மத்திய அரசை பின்பற்றி, அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.


ஒரு சிலர் பணி ஓய்வுக்காலம் பாதுகாப்பாக அமைய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் என்று கூறுகிறார்கள்.


ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 06-01-2025 அன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைத்துள்ளது என்பதால் அவர்களின் நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொள்வார் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். 




பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு - போட்டோ ஜியோ தகவல்

 

 

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு - போட்டோ ஜியோ தகவல்


நாளைய அறிவிப்பை பார்த்துவிட்டு போராட்டத்தை தொடங்குவதா? வாபஸ் பெறுவதா? எனும் முடிவு - போட்டோ ஜியோ


இன்று அமைச்சர் திரு எ.வ.வேலு மற்றும் நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோருடன் போட்டோ ஜியோ மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 






OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Details of the best mobile phones, as of January 2026

  ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள் Details of the best mobile phones, as of January 2026 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தி...