நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, 21ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும், என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார்.
அவரது அறிவிப்பு: ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வருக்கான மதிப்பெண் சான்றிதழ், அவர்களின் முகவரிக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர், தங்களது இருப்பிட முகவரிக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ள, 27ம் தேதிக்குள், பெயரை பதிவு செய்ய வேண்டும். அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வர், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
செய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவத்தை, தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.