ஓலைச்சுவடிகள் வைத்திருந்தால், அதை சீரமைத்து தருவதாக, அரசினர் கீழ்திசை
ஓலைச் சுவடிகள் நூலகம் அறிவித்து உள்ளது. தொல்லியல் துறை கீழ் இயங்கும்,
அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை
பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 72,300 ஓலைச் சுவடிகளை
பாதுகாப்பாக வைத்துள்ளனர். பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஓலை
சுவடிகள், எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளதால், அவை அழியும் நிலையில்
உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில், வேதிப்பொருள் பயன்படுத்தி
பாதுகாக்கவில்லையென்றால், அவை முற்றிலும் அழிந்து போகும். எனவே, இந்த அரிய
பொக்கிஷங்களை பாதுகாக்க, இந்திய அரசின் கலாசார மையத்தின் ஒரு பிரிவான,
தேசிய சுவடிகள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும்
உள்ள சுவடிகளை பாதுகாக்கவும், அதில் உள்ள அடிப்படை தகவல்களை திரட்டவும்
நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஓலைச்
சுவடிகள் வள ஆதார மையமாக, அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகம் மற்றும் ஆய்வு
மையம் அமைந்து உள்ளது. இதுகுறித்து, அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலக
காப்பாளர் சந்திரமோகனை அணுகலாம். ஓலைச் சுவடிகளை வைத்திருப்போர், அரசினர்
கீழ்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகம்,
சேப்பாக்கம் என்ற முகவரியிலும், 044-2536 5130, 98400 41761, 89395 91336
என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...