கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பறந்தாலும் விட மாட்டேன்: இன்று விமானப்படை தினம்

 
இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, மற்ற நாடுகளின் வான் வெளித் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்கிறது. இது 1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக, அக்., 8ம் தேதி தேசிய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து விமானப்படையில் சேர வேண்டும் என்பதை இத்தினம் நினைவுபடுத்துகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. 1947ல் நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்தியா ஐந்து முறை(பாகிஸ்தானுடன் 4, சீனாவுடன் 1) போரில் ஈடுபட்டது. இந்த ஐந்து போரிலும் இந்திய விமானப்படை ஈடுபட்டது.

இந்திய விமானப்படையில், 1,27,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1361 போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரைனர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோ லைட்ஸ், அல்ட்ரா லைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
நான்காவது இடம்:
பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு, வழங்கப்படும் விருதுகளில், உயரிய விருது "பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் "வெஸ்ட்லேன்ட் வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிய விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் , சிறப்பு வாய்ந்த போர் விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை கொண்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3வது பிரசவத்திற்கும் Maternity Leave

     3வது பிரசவத்திற்கும் பேறுகால விடுப்பு Maternity leave for the 3rd delivery * பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய ...