உலகின் குறைந்த விலை கம்ப்யூட்டர் என பெயரெடுத்த ஆகாஷ் டேப்லெட்
கம்ப்யூட்டரின் அடுத்த பதிப்பு, ‘ஆகாஷ் 2’ டேப்லெட். ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு டேட்டாவின்ட் நிறுவனம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் இணைந்து ஆகாஷை அறிமுகப்படுத்தின. இது, உலக கம்ப்யூட்டர்
பயனர்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்தது. மாணவர்களுக்கு 1,100
ரூபாயில் வழங்கப்படும் என அப்போதைய மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல்
தெரிவித்தார். லட்சக்கணக்கான மாணவர்கள் இக்கம்ப்யூட்டர் வேண்டி, பதிவு
செய்திருந்தனர். சில தொழில்நுட்ப கோளாறுகளால் இத்திட்டம் தோல்வியில்
முடிந்தது. தற்போது டேட்டவின்ட் நிறுவனம் இதிலிருந்து விலகி விட்டது.
மும்பை ஐ.ஐ.டி.,யும், சி-டாக் இணைந்து ஆகாஷ் 2 டேப்லெட்டை வடிவமைத்துள்ளன.
இது முழுக்க முழுக்க ஒரு இந்திய தயாரிப்பு.
இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்ரேட்டிங் சிஸ்டம், வி.ஜி.ஏ., முன்பக்க கேமரா, 4
‘ஜிபி’ இன்டர்னல் மெமரி, 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசர், 7 இஞ்ச் டச் ஸ்கீரின்,
3 மணி நேர பேட்டரி சார்ஜ், ‘வைபை’ கனெக்ஷன் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை
2,263 ரூபாய். ஆனால் மத்திய அரசு மானியத்துடன் 1,130 ரூபாய்க்கு
மாணவர்களுக்கு வழங்க உள்ளது. முதலில் ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள்,
பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 22 கோடி கம்ப்யூட்டர்களை
தயாரித்து வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.