தமிழகம் முழுவதும், குரூப்-2 மறுதேர்வு, நடந்தது. சென்னை,
எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை,
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பார்வையிட்டார்.
பின், அவர் கூறியதாவது: ஓரிரு
நாளில் இணையதளத்தில், தேர்விற்கான, கீ ஆன்சர் வெளியிடப்படும். அதில்,
ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஒரு வாரத்திற்குள் தேர்வர்கள் தெரிவிக்க
வேண்டும். எழும் ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழு ஆய்வு செய்து, மீண்டும்,
கீ ஆன்சர் வெளியிடப்படும்.
மறுதேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, 45 நாட்களுக்குள் தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள்,
நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன்பின், அவர்களுக்கு நியமன ஆணை
வழங்கப்படும். வரும் காலங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும், அனைத்து
தேர்வுகளையும், கணினி மூலம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்
கூறினார்.