அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் இந்திய
தொழிற் கூட்டமைப்பு - சி.ஐ.ஐ., ஆகியவை இணைந்து, பொறியியல் கல்லூரி களின்
தரம், செயல்பாடுகள் குறித்து, தேசிய அளவில் ஆய்வு நடத்தியது. இதில்,
தமிழகத்தில், ஆறு கல்லூரிகளுக்கு மட்டுமே, 50க்கும் அதிகமான மதிப்பெண்கள்
கிடைத்துள்ளன. பொறியியல் கல்லூரிகளில், கெமிக்கல், சிவில்,
கம்ப்யூட்டர், ஐ.டி., எலெக்டரிக்கல், இ.சி.இ., மற்றும் எம்.இ., ஆகிய பாடப்
பிரிவுகளில், கல்லூரிகளின் செயல்பாடு, வேலைவாய்ப்பு, பாடத்திட்டம்,
ஆசிரியர்களின் தரம், அடிப்படை வசதிகள், தொழில்துறையினருடனான செயல்பாடுகள்,
சேவை, நிர்வாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. நாடு முழுவதும், 17
மாநிலங்களில் இருந்து, 156 கல்லூரிகள், ஆய்வில் பங்கேற்றன. தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், 41 கல்லூரிகள் பங்கேற்றன. தேசிய அளவில், தென் மாநில
கல்லூரிகள், 18.4 சதவீதம் அளவில் பங்கேற்றன. நிர்வாகம், பாடத்திட்டம்
என, ஒவ்வொருபிரிவிற்கும், மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, மொத்தம், 100
மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப் பட்டது. ஆய்வு முடிவுகள், நேற்று
முன்தினம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.அதன்படி, தமிழகத்தில் இருந்து,
ஆய்வில் பங்கேற்ற, 39 கல்லூரிகளில், ஆறு கல்லூரிகள் மட்டுமே, 50க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளன; மற்றவை, அதற்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளன. அதிலும்,
15க்கும் மேற்பட்ட கல்லூரிகள், வெறும், 30 மதிப்பெண்களை மட்டுமே
பெற்றுள்ளன. இதில், பிரபலமான, முன்னணி கல்லூரிகளின் பெயர்களும்
இடம்பெற்றுள்ளன. சிறப்பான சேவை அளிப்பதிலும், தமிழக கல்லூரிகள் பின்தங்கி
உள்ளன.பங்கேற்ற கல்லூரிகளில், பாடத்திட்டம் நன்றாக இருப்பதாவும், தொழில்
துறையுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மோசமாக
இருப்பதாக,தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...