பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524
பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று
துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை
ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க,
அரசுஉத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 25 முதுகலை ஆசிரியர்,
வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி
உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை,
பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில்
சம்பந்தப்பட்டவர்கள் பங்@கற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக்
கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில்
நடக்கும். இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு
வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து,
அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே,
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர்
இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை
அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில்
அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...