பிசியோதெரபிஸ்ட் நியமனத்தில், அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க
உத்தரவிடக் கோரிய வழக்கில், ஒரு இடத்தை காலியாக வைத்து, 5 பேரை
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைத்து, தகுதியான ஒருவரை நியமிக்க,
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை
ஜெயந்தி மீனாம்பிகை, தாக்கல் செய்த மனு: கிராமப்புற மருத்துவ சுகாதார
பணிகள் துறையில் பிசியோதெரபிஸ்ட் கள் (இயன்முறை மருத்துவர்) 15 பேர் பணி
நியமனத்திற்கு, தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் 79 பேரை
பரிந்துரைத்தது. கல்வி, வேலைவாய்ப்பில் அருந்ததியருக்கு சிறப்பு ஒதுக்கீடு
வழங்க வேண்டும் என 2009 ஏப்.,29 ல் அரசு உத்தரவிட்டது. இதன்படி,
"பிசியோதெரபிஸ்ட்'கள் நியமனத்தில், அருந்ததியருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு
அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2005 ஜூலை 20 வரை (கட்-ஆப்) பதிவு செய்த
ஆதிதிராவிடர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு
அவ்வாறு தேதி நிர்ணயிக்கவில்லை. அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு
செய்திருந்தால், எனக்கு பணி கிடைத்திருக்கும். பணி நியமனத்தில், எனது பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், மனு விசாரணைக்கு
வந்தது. அரசு வக்கீல், பிசியோதெரபி படித்தவர்களில், அருந்ததியர் 25 பேர்
மட்டும், மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில்,
பதிவு மூப்பில் மனுதாரர் 2 வது இடத்தில் உள்ளார் என்றார். இதையடுத்து நீதிபதி கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,
ஆதிதிராவிடர்களில் அருந்ததியர் பிரிவு என தனித்து காட்டவில்லை என, அரசு
தரப்பே ஒத்துக்கொள்கிறது. "பிசியோதெரபிஸ்ட்' பணி நியமன தேர்வு நடைமுறை 2010
ல் துவங்கிவிட்டது. அரசு விதிகள்படி, இடஒதுக்கீடு முறை
பின்பற்றப்படவில்லை. ஒரு பணி இடத்தை அருந்ததியர் பிரிவை சேர்ந்தவருக்கு உள் ஒதுக்கீடு
முறையில், வழங்கியிருக்க வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க
வேண்டும். தகுதியான 5 பேரை பரிந்துரைத்து அதன் அடிப்படையில், ஒருவரை 2
மாதங்களுக்குள், அரசு தேர்வு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O.Ms.No.170, Dated: 22-09-2024 - Providing non-equivalent for various degree courses - Attachment: DSE Proceedings, Tamil Nadu State Council of Higher Education Letter and Ordinance
பல்வேறு பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகளின் 23 பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை G.O. Ms. No. 170, D...