கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஓய்வுபெற்ற துணை ராணுவ படையினருக்கும் முன்னாள் ராணுவத்தினர் அந்தஸ்து கிடைத்தது

துணை ராணுவ படையில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர்களுக்கு, "முன்னாள் ராணுவத்தினர்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு லட்சம், துணை ராணுவப்படை முன்னாள் வீரர்கள் பயனடைவர்.டில்லி அருகே உள்ள குர்கானில் நேற்று, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற, மத்திய, உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.அதன்படி, சி.ஆர்.பி.எப்., மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.ஐ.எப்.,), எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) இந்தோ - திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.,) மற்றும் சஷாஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) ஆகிய, துணை ராணுவப் படையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற, நான்கு லட்சம் பேருக்கு, முன்னாள் ராணுவத்தினர் அந்தஸ்து கிடைக்கும்.ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும், "எக்ஸ்சர்வீஸ் மேன்' எனப்படும், முன்னாள் ராணுவ வீரர் அந்தஸ்து, பல சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. கேன்டீன் வசதி, மருத்துவமனை வசதி, கல்வி, வேலைவாய்ப்பில் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல பலன்கள், துணை ராணுவத்தினருக்கும் கிடைக்கும்.முன்னாள் ராணுவத்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டாலும், துணை ராணுவத்தினர், எக்ஸ்சர்வீஸ்மேன் என்றழைக்கப்பட மாட்டார்கள்; எக்ஸ்-சென்ட்ரல் போலீஸ் பெர்சானல் என்றழைக்கப்படுவர்.துணை ராணுவப் படை பிரிவுகளில், எட்டு லட்சம், ஆண் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். முன்னாள் துணை ராணுவப் படையினரின் நீண்ட கால கோரிக்கையான, முன்னாள் ராணுவத்தினர் அந்தஸ்தை நேற்று வழங்கி, அறிவிப்பை வெளியிட்ட, அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, துவக்க காலத்தில், மகாராஷ்டிராவில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...