நாம் ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்தால்தான் அந்நாள் முழுமை பெற்றதாகக் கருதமுடியும்.
பறவைகள் கூட எத்தனையோ விதைகளின் முளைப்புத் திறனை அதிகரித்து, அவற்றை செடிகளாகக் கிளைவிட உதவி வருகின்றன.
மலர்கள் கூட காற்று மண்டலத்தை நறுமண மயமாக்கிய பின்னர் தாங்கள் உருவாக
உதவிய பூமியை முத்தமிட்டு, சருகாகி எருவாகி வளம் சேர்க்கின்றன.
ஆனால் பகுத்தறிவு தமக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டிக் கொள்கிற
மனிதர்கள் பலர் சுயநலம் மட்டுமே பிரதானம் என்று மண்ணுக்கு பாரமாய்
வாழ்கிறார்கள்.
தினமொரு நற்செயல் செய்கிறபோது நம்மையும் அறியாமல்
நம் மகிழ்ச்சி வட்டம் விரிவடையும். உடல் முழுவதும் காந்த அலைகள் பரவும்.
நாம் காணுகிற திசைகளில் அழகும், அன்பும் நர்த்தனமிடும். இரவு படுக்கையில்
விழும் முன் அன்று நாம் செய்த நற்காரியத்தை நினைத்தால் உள்ளம்
ஆர்ப்பரிக்கும், அமைதி நிலவும், ஆனந்தம் தழுவும்.
'ஒழுக்கம்
என்பது சுயநலமில்லாத வாழ்வு' என்றார் சுவாமி விவேகானந்தர். உற்று
நோக்கினால் ஒழுக்கமற்ற செயல்கள் அனைத்துமே சுயநலமின்மையால் உருவாவதில்லை
என்பதைப் புரிந்து கொள்ளலாம். நம் தூய்மையை சமூகமல்ல, நாம்தான்
நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
தாகத்தினால் தவிக்கின்ற கன்றுக்கு நீர்கொடுத்தால் அதுவும் நற்செயல். காயத்தில் தடுமாறும் நாய்க்கு உணவளித் தால் அதுவும் உயர் செயலே.
வழிகேட்டு வந்தவருக்கு, சரியான பாதையை அடையாளம் காட்டுவதும் நற்செயலே.
விபத்தில் விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல் வதும் உன்னதச் செயலே.
வகுப்புக்கு வராத நண்பனுக்கு, வகுப்பில் நடந்தவற்றை விளக்கிச் சொல்வதும் மேன்மையான செயலே.
இப்படிப்பட்ட செயல்களை நாம் யாரும் பாராட்டுவார்கள் என்று செய்வதில்லை.
நமது திருப்திக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மேற்கொள்கிற போது, நம் உள்ளம்
உவகையடைகிறது.
மாணவப் பருவத்திலே இது போன்ற பண்புகளைப் பதியம்
போட்டால், தலைமைப் பண்பு அரும்ப ஆயத்தமாகி விடும். பொறுப்புகளைத் தட்டிக்
கழிக்கிற இளைஞர்கள் சமூகத்துக்கு பாரமாக இருக்கிறார்கள். கூடுதல்
பொறுப்புகளையும் தாங்குவதற்குத் திறனுடைய இளைஞர்கள், பாலமாக
இருக்கிறார்கள்.
நாம் பிறருக்கு நற்செயல் செய்கிற போதெல்லாம் அது
நமக்கே திரும்ப வந்து சேருகிறது என்பதை உணர்ந்தால் நம்மைச் சுற்றி
எப்போதும் கொண்டாட்டமும் கும்மாளமும்தான் நிலவமுடியும்.
மலர்கள் கூட காற்று மண்டலத்தை நறுமண மயமாக்கிய பின்னர் தாங்கள் உருவாக உதவிய பூமியை முத்தமிட்டு, சருகாகி எருவாகி வளம் சேர்க்கின்றன.
ஆனால் பகுத்தறிவு தமக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டிக் கொள்கிற மனிதர்கள் பலர் சுயநலம் மட்டுமே பிரதானம் என்று மண்ணுக்கு பாரமாய் வாழ்கிறார்கள்.
தினமொரு நற்செயல் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் மகிழ்ச்சி வட்டம் விரிவடையும். உடல் முழுவதும் காந்த அலைகள் பரவும். நாம் காணுகிற திசைகளில் அழகும், அன்பும் நர்த்தனமிடும். இரவு படுக்கையில் விழும் முன் அன்று நாம் செய்த நற்காரியத்தை நினைத்தால் உள்ளம் ஆர்ப்பரிக்கும், அமைதி நிலவும், ஆனந்தம் தழுவும்.
'ஒழுக்கம் என்பது சுயநலமில்லாத வாழ்வு' என்றார் சுவாமி விவேகானந்தர். உற்று நோக்கினால் ஒழுக்கமற்ற செயல்கள் அனைத்துமே சுயநலமின்மையால் உருவாவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். நம் தூய்மையை சமூகமல்ல, நாம்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
தாகத்தினால் தவிக்கின்ற கன்றுக்கு நீர்கொடுத்தால் அதுவும் நற்செயல். காயத்தில் தடுமாறும் நாய்க்கு உணவளித் தால் அதுவும் உயர் செயலே.
வழிகேட்டு வந்தவருக்கு, சரியான பாதையை அடையாளம் காட்டுவதும் நற்செயலே. விபத்தில் விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல் வதும் உன்னதச் செயலே.
வகுப்புக்கு வராத நண்பனுக்கு, வகுப்பில் நடந்தவற்றை விளக்கிச் சொல்வதும் மேன்மையான செயலே.
இப்படிப்பட்ட செயல்களை நாம் யாரும் பாராட்டுவார்கள் என்று செய்வதில்லை. நமது திருப்திக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மேற்கொள்கிற போது, நம் உள்ளம் உவகையடைகிறது.
மாணவப் பருவத்திலே இது போன்ற பண்புகளைப் பதியம் போட்டால், தலைமைப் பண்பு அரும்ப ஆயத்தமாகி விடும். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிற இளைஞர்கள் சமூகத்துக்கு பாரமாக இருக்கிறார்கள். கூடுதல் பொறுப்புகளையும் தாங்குவதற்குத் திறனுடைய இளைஞர்கள், பாலமாக இருக்கிறார்கள்.
நாம் பிறருக்கு நற்செயல் செய்கிற போதெல்லாம் அது நமக்கே திரும்ப வந்து சேருகிறது என்பதை உணர்ந்தால் நம்மைச் சுற்றி எப்போதும் கொண்டாட்டமும் கும்மாளமும்தான் நிலவமுடியும்.