இந்திய அரசின் அமைச்சகப் பணி இடங்களையும், இதர முக்கிய அரசுப் பணி
இடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி.,
நடத்தி வருகிறது.
தற்போது இந்தியாவின் 3 முக்கிய படைப் பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வை
நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு
2013 வரும் 2013 பிப்ரவரியில் நடத்தப்படவுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?:
யு.பி.எஸ்.சி.,யின் கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு மூலமாக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமி, எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி, ஐதராபாதிலுள்ள இந்தியன் ஏர்போர்ஸ் அகாடமி, சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, பெண்கள் (நான்-டெக்னிகல்) பிரிவு - ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, சென்னை ஆகிய அனைத்து பணிகளிலும் சேர்வதற்கானது ஆகும். இவற்றில் முறையே 250, 40, 32, 175, 12 காலியிடங்கள் உள்ளன.

தகுதிகள் என்னென்ன?:
இந்தியன் மிலிடரி அகாடமிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், இந்தியன் நேவல் அகாடமிக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பும், இந்தியன் ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 வரையிலான படிப்பில் இயற்பியல், கணிதத்துடன் படித்திருப்பதோடு பட்டப் படிப்பும் தேவைப்படும். இந்தப் பணிகள் அனைத்திற்குமே கல்வித் தகுதியுடன் சில குறைந்த பட்சம் உடற் தகுதிகளும் தேவைப்படும். உயரம், இதற்கேற்ற எடை போன்றவற்றின் பட்டியலைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறிய வேண்டும்.

இதர தகவல்கள்:
யு.பி.எஸ்.சி.,யின் கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை ஆகிய 2 மையங்களிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் திருப்பதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள ரூ.200/-ஐ பணமாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் வங்கிக் குழுமம் சார்ந்த வங்கியில் செலுத்தலாம். அதே போல் ஆன்-லைன் முறையிலும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 10.12.2012
இணையதள முகவரி: http://upsc.gov.in/exams/notifications/2013/cds1/eng.pdf