கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 28 [December 28]....

நிகழ்வுகள்

  • 1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது.
  • 1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
  • 1836 - தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
  • 1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
  • 1846 - அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
  • 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.
  • 1879 - ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
  • 1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
  • 1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
  • 1908 - இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1929 - நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
  • 1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
  • 1958 - கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
  • 1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.
  • 1989 - அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1994 - விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1999 - இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2005 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 2006 - எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
  • 2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பிறப்புகள்

  • 1932 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
  • 1937 - ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர்
  • 1940 - அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
  • 1944 - கேரி முலிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
  • 1945 - பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001)
  • 1947 - நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...