கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பாசம்...!

பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுப்பிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

மாணவன்: ”’ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாறு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது ?””

ஆசிரியர்: ”” உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா ?

சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.””

மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.

ஆசிரியர்: ””நம் பள்ளி திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ்
நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியிலிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.””

மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் காணவில்லை.

ஆசிரியர்: ””நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?””

மாணவன்: ”’நான் புற்களை பார்த்தவாறு நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகையால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த புற்கள் சில அழகாக இருந்தது ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது.  இறுதியில் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.””

ஆசிரியர்: ””அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது.

அவர்களின் பாசத்தை மரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிடம், நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.””

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...