கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இலக்கணம் மீறிய கவிதை..!

''இலக்கணம் மீறிய கவிதை என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?''


''முதன்முதலாக ஒரு மழலை, அம்மாவை அழைக்கும் வார்த்தை 'ங்கா'.

தமிழில் மெல்லினத்தில் முதல் எழுத்து 'ங'. மற்ற எழுத்துக்களைவிடவும் மென்மையாக ஒலிப்பதால்தான் மெல்லினம் என்கிறோம். ஆனால், எந்த ஒரு வார்த்தையும் 'ங்'கை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குவதில்லை. ஏனெனில், தமிழ் இலக்கணப்படி வார்த்தைகளின் முதல் எழுத்தாக மெய்யெழுத்து அமையாது. உயிரெழுத்தோ, உயிர்மெய் எழுத்தோ மட்டும்தான் முதல் எழுத்தாக வரும்.

ம்மா, ப்பா என்றெல்லாம் எழுதுவதற்கு தமிழ் இலக்கணம் இடம் தருவதில்லை. ஆனால், குழந்தையின் 'ங்கா' மட்டும் இந்த இலக்கணங்களை மீறிய மழலைக் கவிதை.''

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...