ஒகுய்ஸ்தேன்
ரொம்ப நல்லவன். பேரழகன் மட்டும் இல்லை, பேரழகன்' சூர்யா மாதிரியே இவன்
முதுகிலும் பெரிய கூன் ஒன்றும் இருந்தது. அதுதான் இவனுக்கு ரொம்ப வருத்தம்.
பிரமாதமாக வயலின் வாசிப்பான் ஒகுய்ஸ்தேன். இவனோட ஊரில் எந்த விழா
நடந்தாலும் அதுல நம்ம ஒகுய்ஸ்தேனோட நிகழ்ச்சி இருக்கும்.
ஒருநாள் பக்கத்து ஊரில் ஒரு நிகழ்ச்சிக்கு போயிட்டு நடுராத்திரி காட்டு வழியா ஊருக்கு திரும்பிட்டு இருந்தான். அந்த காட்டுல மந்திரக் குள்ளர்கள் இருப்பாங்க. அதனால வேகவேகமா நடந்தான். ஆனாலும் அந்த குள்ளர்கள் இவனைப் பார்த்துட்டாங்க. இவன் ரொம்ப பயந்துட்டான்.
அந்த குள்ளர்களுக்கு இசைன்னா ரொம்ப இஷ்டம். இவனோட வயலினைப் பாத்து குஷியாகி... இவனை வாசிக்கச் சொன்னாங்க.
இவனும் குஷியா வாசிச்சான். இவனோட இசையில் மயங்கிப் போன குள்ளர்கள் "உனக்கு என்ன வேண்டுமோ கேள்'' என்றார்கள்.
ஈவனோட அம்மா அடிக்கடி இவன்கிட்ட "இந்த கூன் மட்டும் இல்லைன்னா நீ ராஜகுமாரன் மாதிரியே இருப்பே''ன்னு வருத்தப்படுறது ஞாபகம் வந்தது. அதனால இந்த கூன் மறைந்தாலே போதும்னு கேட்டான்.
"நீ வீடு போய் சேருவதற்குள் உன் கூன் மறைந்துவிடும்'' என்று அனுப்பி வைத்தார்கள் குள்ளர்கள்.
வீட்டை நெருங்கும்போது ஈவனோட கூன் இல்லாம போச்சு. ஊர்ல எல்லோரும் எப்படி இவனுக்கு கூன் மறைஞ்சதுன்னு ஆச்சர்யப்பட்டாங்க. இவன் நடந்ததை சொன்னதும் "முட்டாள்! கூன் மறைய வேண்டும் என்று கேட்டதுக்கு பதில் பெருஞ்செல்வம் கேட்டிருக்கலாமே''னு திட்டினாங்க. "எனக்கு அதில் எல்லாம் விருப்பம் கிடையாது'' என்றான் பேரழகன்.
"நான் போய் வாங்கிட்டு வர்றேன் பாரு''னு பொறாமைக்காரன் ஒருவன் அவனோட புல்லாங்குழலை எடுத்துட்டு போனான். அதே மாதிரி குள்ளர்களை தன் இசையால் சந்தோஷப்படுத்தினான். அவர்களும், "என்ன வேணுமோ கேள்''னு கேட்டாங்க, பெரும் சொத்து வேணும்னு கேட்க நினைத்த பொறாமைக்காரன், பதட்டத்தில் ஒன்றும் புரியாமல், "ஒகுய்ஸ்தேன் விரும்பாதது எல்லாம் எனக்கு வேண்டும்'' என்றான்.
குள்ளர்களும், "நீ வீடு போய் சேருவதற்குள் வந்து சேரும்'' என்று வரம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். வீட்டுக்கு திரும்பி வர வர தன் பின்னால் கனம் சேருவதை உணர்ந்தான் பொறாமைக்காரன். பெருஞ்செல்வம் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான். வீடு வந்து சேர்ந்ததும்தான் தெரிந்தது ஒகுய்ஸ்தேன் விரும்பாத கூன் விழுந்த முதுகைதான் விரும்பி வரமாக பெற்று வந்திருக்கிறோம் என்று!