'சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக
உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு
செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள் பற்றிப்
பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் சகஜமாகப்
பேசுங்கள். கை, கால்களைப் போல அனைத்தும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு
உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத
சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள்.
நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் -
விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.'
- டாக்டர் விகடன்
- டாக்டர் விகடன்