கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மொசார்ட்... [Mozart]

 

மொசார்ட்... மாபெரும் இசைஞானி. சிலருக்கு பிறவியிலேயே இசைஞானம் வாய்த்திருக்கும் என்பார்களே அப்படி ஒரு மாமேதை மொசார்ட். ஏழாவது குழந்தையாக பிறந்த அவர் மூன்று வயதில் இசைக்கருவியை மீட்டியபொழுது மக்கள் சொக்கி நின்றனர்.

நான்கு வயதில் இசை நூல்களை கற்றுத்தேறினார். ஐந்து வயதில் தானே பாடல்களையும், ஏழு மற்றும் எட்டு வயதுகளில் முறையே சோனட் மற்றும் சிம்பனிக்களை இயற்றினார். பத்து வயதிற்குள் இசை கருவிகள் யாவற்றையும் இயற்றுகிற ஆற்றல் அவருக்கு வாய்த்தது. அவரின் இசை கேட்ட பதினைந்து நிமிடங்கள் மனிதர்கள் பரவசத்தில் உறைந்து போவதாக சொல்ல வருங்காலத்தில் இசையால் மனநலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் அது மொசார்ட் விளைவு என்றே அழைக்கபட்டது.

வெறும் பத்து வயதில் இவர் இசைக்கோர்வையை கேட்டு ஆஸ்திரியா ராணி இவரை மடியில் அள்ளிக் கொஞ்சினார். மித்ரிடட் டி போன்டிட் எனும் இசைக்கோர்வையை பதினான்கு வயதில் இவர் வாசித்தபொழுது பலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்க சொல்லி மக்கள் நெகிழ்ந்தார்கள்.

மண வாழ்க்கை சோகமானதாக அமைந்தது. இசையில் ஆறுதல் தேடினார் மனிதர். இசையிலேயே மூழ்கினார். 24 வயதிலே புகழ்பெறத்துவங்கி மன்னரின் விருப்பத்திற்குரிய இசைக்கலைஞராக கௌரவிக்கப்பட்ட சலேரி என்பவர் அரண்மனையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இசை அமைப்பது, இளவரசர்களுக்கு இசை கற்றுதருவது, சபையில் இசை வாசிப்பது என்று முக்கிய புள்ளியாக இருந்தார். அதை மொசார்ட் உடைத்து காண்பித்தார்.

இவர் இசைத்த இடங்களில் மக்கள் கண்ணீர் சிந்தினார்கள்; தேவகானம் கேட்பதாக, இறைவனே கூட வந்து விரும்பி கேட்பதாக சிலிர்த்தார்கள். இதைக்கண்டு மனம் வெம்பினார் சலேரி. இதை ஒட்டி எடுக்கப்பட்ட அமேடிஸ் படம் எட்டு ஆஸ்கர்களை அள்ளியது. தன் வாழ்நாளில் வறுமையில் தான் பெரும்பாலும் அவர் வாடினார்; கடன் சுமையால் பாதிக்கபட்டு இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் பிரிவதற்கு சிலகாலத்துக்கு முன்பு மாயக்குழல் எனும் இசைக்கோர்வையை உருவாக்கினார்.

அவர் 35 வயதில் மரணமடைந்தார். அன்றைக்கு ஆஸ்திரியாவில் இருந்த சடங்குகளின்படி அவரை பலபேர் அடக்கம் செய்யப்பட்ட சவக்குழியில் அடக்கம் செய்தார்கள்; மக்கள் பெரும்பாலும் அவரை வழியனுப்ப வரவில்லை - அதுவும் ஆஸ்திரியாவின் பழக்கமே. அவர் இறந்த பிறகு எண்ணற்ற நூல்கள் எழுந்து அவர் புகழை மீண்டும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின; இசை உள்ள காலமெல்லாம் அவரின் கோர்வைகளும் உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.27).

(படம்: Mozart c. 1780, detail from portrait by Johann Nepomuk della Croce)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...