தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல்
புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான
மாதிரி பாடதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களுடன்
கருத்துகள் கேட்க கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை பெரிய
கடைவீதி புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மனையியல், ஊட்டசத்து, கணினி
அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கருத்துகள் கேட்கப்பட்டன.
மாதிரி பாடதிட்டத்தை கல்வியாளர்கள் படித்து பார்த்து, அதில் சேர்க்கப்பட
வேண்டிய பகுதிகள், நீக்கப்பட வேண்டிய பகுதிகளை குறிப்பெடுத்து கொடுத்தனர்.
கல்வியாளர்கள் கொடுக்கும் குறிப்புகளை கொண்டு, வரைவு பாட திட்டம்
உருவாக்கப்பட்டு, அவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக மாநில கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், வரலாறு, பொருளியல், அரசியல்
அறிவியல், இந்திய பண்பாடு, கலாச்சாரம், கணக்கு பதிவியல், வணிகவியல்,
சிறப்பு தமிழ், புவியியல் ஆகிய பாடங்களுக்கும் கருத்து கேட்கப்படுகிறது.