கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என உத்தரவு...

 ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையாலும், ஆண்கள் பெயர்களை ஊதா மையாலும் எழுதும் வழக்கமாக உள்ளது. அதேபோல் வருகை பதிவேட்டில் மாணவ, மாணவியரின் பெயர்களுடன் ஜாதி மற்றும் மதத்தை எழுதும் வழக்கமும் உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில அரசு,  பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என்றும், வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையால் எழுதக்கூடாது என்றும் அனைவரும் சமமே என்ற கோட்பாடு இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு Misuse of power to please a few i...