அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் பயன், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக, நீட் தேர்வில் 720-க்கு 150 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குகூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதேநேரம், 500-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, நடுத்தர மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். எனவே, கலந்தாய்வு தொடங்குவதற்குள், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் தமிழக அரசு சேர்க்க வேண்டும்’’ என்றனர்.