கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது எப்போது ? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி...

 பத்தாம் வகுப்பு, 11,  12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 ஊராட்சிகளில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 

தமிழகத்தில்தான் முதல்முறையாக எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எளிமையாகி உள்ளது. 405 மாணவர்களில் 313 பேர் பொது மருத்துவத்திலும், 92 பேர் பல் மருத்துவத்திலும் சேர வாய்ப்புள்ளது.

ஐஐடி பயிற்சி நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை தில்லியில் இருந்து தமிழகம் வரும் குழுவுடன் ஆலோசனை நடத்தி, பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும். அரசு நடத்தும் பட்டயக் கணக்காளர் பயிற்சி வகுப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்கு 11-ஆம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு

  கல்லூரிக் கனவு கையேடு  Kalloori Kanavu Guide - College Dream Guide >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...