கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5 லட்சம் பரிசு - மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பு...

 


சாலை விபத்துகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்காக வரும் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது.

 இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த 17ம் தேதி அனைத்து மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 கடந்த காலங்களில் ெவறும் சடங்குக்காக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வாரவிழாவானது இந்தாண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒரு மாதத்திற்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி வருகிற ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17ம் ேததி வரை, பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள்.

இந்தாண்டு ஜனவரி  20 மற்றும் 25ம் தேதிகளில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எம்பி - எம்எல்ஏக்கள் தலைமையில் சாலை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும். இந்நிகழ்வில் பங்கேற்கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்த விபரங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு  குறித்த பொருள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். இந்த நடைப்பயணத்தில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள்  கலந்து கொள்வார்கள். 

முன்னதாக, ஜனவரி 18 - 19ம் தேதிகளில் சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்குவார்.

அப்போது சாலை  பாதுகாப்பில் சிறந்த பணிகளைச் செய்த மூன்று சிறந்த நபர்களுக்கு (முதல்  இடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்) ரொக்கப் பரிசை வழங்குவார். அதாவது, விபத்தில் சிக்கியவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, அவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் கொண்டு செல்ல உதவுபவர்ளுக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உதவுகின்ற  சிறந்த உள்ளம் கொண்ட நபர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.

 இவ்வாறு விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் நபர்களுக்கு சட்டப் பாதுகாப்பு  வழங்குவதற்கான விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இவ்விவகாரத்தில் போலீஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் நபர்களின் பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற சொந்த விபரங்களை கொடுக்குமாறு  அவருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. பரிசுத் தொகையை பொருத்தமட்டில், முதல் பரிசு ஐந்து லட்சம், இரண்டாவது பரிசு இரண்டு  லட்சம், மூன்றாவது பரிசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க முடிவு  செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...