கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் நிதி ஒதுக்கீடு...

 


பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக, “பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


வழிகாட்டுதல்கள்

மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை:

மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது. அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேற்காணும் வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவும் விடுவிக்கப்பட்ட நிதியினை ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.500/- வீதம் வட்டார வளமையத்திலிருந்து PFMS வாயிலாக தொகை விடுவித்தல் வேண்டும். தொகை விடுவிக்கப்பட்ட விவரத்தினை 23.12.2020 க்குள் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

இணைப்பு : Safety & Security Block wise Fund Released Abstract

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.2 - Updated on 31-07-2025

  தற்போது TNSED Schools  App-ல் Health and wellbeing - Students health screening module changes பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள...