கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.12.2020 (செவ்வாய்)...

 


🌹அவமானங்களும் அவ்வப்போது மனிதனுக்கு தேவை தான் இல்லையென்றால் மானம் என்ற ஒன்றை மனிதன் மறந்து விடுவான்.!

🌹🌹வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது,

புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது.!!

🌹🌹🌹என்ன தான் உரிமையோடு நினைத்துப் பழகினாலும் 

சில நேரங்களில் நீ யாரோ 

நான் யாரோ என்று உணர வைத்து விடுகிறார்கள் சில உறவுகள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀பள்ளி திறக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு வரும்போது, ஸ்மார்ட் கார்ட்டை கட்டாயம் அணிந்து வரவேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது 

🎀🎀அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மருத்துவ விடுப்பு தவிர அதிகமான விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

🎀🎀பள்ளி, கல்லூரிகளைத் திறக்காவிட்டால் ஜனவரி முதல் போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை

🎀🎀ஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு முடிவுகளை ஆயுஷ் மத்தியக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ளது 

🎀🎀B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

🎀🎀அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது

🎀🎀2021 ஆம் வருடத்தில் இருபத்து மூன்று 23-நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் என 5 விடுமுறை தினங்கள் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட 5 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

🎀🎀சைனிக் பள்ளி விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த டிச.25 வரை அவகாசம்

🎀🎀கால்நடை உதவி மருத்துவா் பதவி: ஜன.4-இல் நோ்காணல் தொடக்கம்

🎀🎀தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வு: 2.5 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி

🎀🎀TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு

🎀🎀சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் எவ்வாறு நடத்துவது – சிபிஎஸ்இ ஆலோசனை

🎀🎀செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் வரும் ஜனவரி 19- ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்                                                  🎀🎀மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் என கொடுப்பதுதான் தமிழக அரசியல்

பாஜகவிற்கு வாக்கு அளிக்கவில்லையென்றால் காரின் டயரில் விழுந்து கும்பிடுகிறவர்கள் தான் உங்களுக்கு வாய்ப்பார்கள்

-அண்ணாமலை, பாஜக துணைத் தலைவர்.

🎀🎀ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்

30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்

- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

🎀🎀சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி; பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🎀🎀பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 ரூபாய் வழங்குவதற்கு 5604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

🎀🎀ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் 10, 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்பட்டது.

🎀🎀பொதுத் தேர்வு தொடர்பாக ஆசிரியர்களுடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால்  கூறியுள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் இது தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

🎀🎀நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது இந்த ஆண்டு முதல் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்காக விருது என்ற பெயரில் வழங்கப்படும்.

-முதல்வர் பழனிசாமி

🎀🎀தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது அருணா ஜெகதீசன் ஆணையம்; ஜனவரி 19-ம் தேதி தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராக வேண்டும் என உத்தரவு

🎀🎀தமிழக மின்வாரியம் உட்பட எந்த பொது துறை நிறுவனமும் தனியார் மயம் செய்யப்படாது.

தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது 

- அமைச்சர் தங்கமணி

🎀🎀ஏப்ரல் 3 அல்லது 4வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துமாறு அதிமுக கோரிக்கை. 

🎀🎀மே மாதத்தில் வெயில் அதிகம் என்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும்.

- பொள்ளாச்சி ஜெயராமன்

🎀🎀மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டிவிட்டால் தான் டுவிட்டரில் இருந்து வெளியேறி விடுவதாக பிரசாந்த் கிசோர் அறிவிப்பு

🎀🎀அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

🎀🎀திமுக தலைவர் ஸ்டாலின் - தமிழக ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார்

🎀🎀புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு மத்திய அரசு தடை !

வரும் டிசம்பர் 31வரை தடை விதித்து உத்தரவு

🎀🎀பாஜக அரசியலுக்காக எதையும் செய்யக்கூடிய ஏமாற்றுக் கட்சி. 

- மம்தா பானர்ஜி

🎀🎀டிச.31 மற்றும் ஜன.1 ஆம் தேதிகளில் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது

கடற்கரை, சாலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

- தமிழக அரசு

🎀🎀புரெவி புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு விரைவில் தமிழகம் வருகிறது 

- உள்துறை அமைச்சகம்

🎀🎀சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

-தமிழக அரசு

🎀🎀மகாராஷ்டிராவில்

இன்று முதல் ஜன.5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு  

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 15 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் 

- மகாராஷ்டிரா அரசு

🎀🎀அதிமுகவுக்கு மிகச்சிறந்த அடிமை அரசு என்ற விருதை மக்கள் வழங்குவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என சேலத்தில் விடியலை மீட்போம் என்ற பிரச்சாரத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேசினார்.

🎀🎀பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்வரும் தேர்தலில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என்று சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேசியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்; இந்த கருத்தை கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக தோற்றதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே காரணம் என்று ராஜவர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

🎀🎀ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி

கடந்த நவம்பரில் பிரதமர் மோடி ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதை பரிந்துரைத்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைப் பரிந்துரை செய்தார்

🎀🎀ஒரே நாளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் பேட்டியளித்தார்.

சென்னையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு பேட்டியளித்தார். தேர்தல் பிரச்சனை குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி முடிவெடுக்க அதிகாரம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

🎀🎀இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை , மத்திய அரசு முழு முன்னெச்சரிக்கையுடன் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார்.

🎀🎀நாளை 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம்.

குன்னம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நாளை முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த திட்டம்.

🎀🎀கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறினார். கடலூரில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை துவங்கிய பின் உதயநிதி பேட்டியளித்தார்.

🎀🎀யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை மட்டுமே முடிவு செய்யும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

🎀🎀கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்

🎀🎀சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிரணி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

🎀🎀ஜெருசலேம் புனித பயணம் செல்ல, தமிழக அரசின் நிதியுதவி 37,000 ரூபாயாக

உயர்த்தப்படும்; கிறிஸ்துமஸ் விழாவில்,

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

🎀🎀இங்கிலாந்தில் மீண்டும் புதிய வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி சீல் வைக்கவும்,  பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளன

🎀🎀சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...