கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 04.01.2021(திங்கள்)...

 


🌹மனம் விட்டுப் பேசினால் தீராத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை.

ஆனால் மனம் விட்டுப் பேசத்தான் யாருக்கும் மனம் வருவதில்லை.!

🌹🌹மனிதனை தவிர பிற உயிர்கள் ஒரு போதும் தன் குணங்களையும், இயல்புகளையும் ஒரு போதும் மாற்றிக் கொள்வதே இல்லை.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈CPS ஒழிப்பு இயக்கத்திற்கு முன்னாள் இராணுவத்தினர் பணியாளர்கள் நலச்சங்கம் ஆதரவு

🌈🌈அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக பணியேற்கவுள்ள கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 

🌈🌈திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் 

திமுக தலைவர் ஸ்டாலின்

🌈🌈நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு: 51.08 சதவீதம் பேர் மட்டும் தேர்வு எழுதினர்: விடைத்தாளில் கைரேகை பதிவு புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

🌈🌈ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன்

🌈🌈நாட்டு மக்கள் அனைவருக்கும்

கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசம்;

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களின் பட்டியலை விரைவில் இறுதி செய்து ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு; 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தல்.

🌈🌈ஜனவரி 5-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

🌈🌈மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்.

🌈🌈அமெரிக்காவில் சுமார் 4.2 மில்லியன் COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

🌈🌈உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

🌈🌈இமாசலப்பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்று கடும்பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🌈🌈புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

🌈🌈கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

🌈🌈தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு என தகவல்

திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுமே ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தன

🌈🌈தமிழகத்தில் முதலில் சுகாதாரத்துறையினர் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

- சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

🌈🌈நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது.

🌈🌈அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு

🌈🌈தடுப்பூசி எவ்வளவு காலம் பயனுள்ளதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது.

தொற்று பரவலை தடுக்க எவ்வளவு மக்கள் தொகைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியாது.

- ICMRன் பொது இயக்குனர்

🌈🌈டெல்லி போராட்டத்தில் தொடரும் சோகம் - கடும் குளிரை தாங்க முடியாமல் இரண்டே நாட்களில் 6 விவசாயிகள் உயிரிழந்த பரிதாபம்

🌈🌈கேரளாவில் இன்று கல்லூரிகள் திறப்பு: 

ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணிநேர வகுப்பு மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. இதனால், தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம். லோக்சபா தேர்தலில் 38 இடங்களை வென்று, லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் பழனிசாமி.

டில்லியில் 38 நாள் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதிமுக அரசும் கண்முடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறது. மினி கிளினிக்குகள் துவங்கியது மக்களை ஏமாற்றும் திட்டம். ஆட்சியில் இல்லாத நேரத்திலேயே மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்தது திமுக.திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது. மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். முதியவர்கள் உதவித்தொகை கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்

🌈🌈தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் 7 அறிவியல் சார் பணியிடங்கள் (Scientific Posts) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-01-2021

🌈🌈அரசுப் பணி - ஓட்டுநர் பணியிடத்திற்கான அறிவிக்கை (NOTIFICATION) மற்றும் படிவம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-01-2021.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...