கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Budget 2021 : கல்வித் துறை குறித்த அறிவிப்புகள்...



 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வித்துறையின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

அதன்படி,


► நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.


► புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.


► மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படும்.


► அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


► தேசிய கல்வி கொள்கையின் கீழ் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மேம்படுத்தப்படும்.


► நாடு முழுவதும் 100 ராணுவப் பள்ளிகள் திறக்கப்படும்.


► ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.


► தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...