கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 05-03-2021 (வெள்ளி)...

 


🌹பொய்கள் உண்மையாகும் போது 

உண்மைகள் ஊமையாக வாழ நேரிடும் அதற்கு தோல்வி என்று அர்த்தமில்லை.

உண்மை என்பது உறுதியாக மீண்டும் ஒருநாள் நிறுத்தப்படும் 

அன்று பொய்கள் முகவரி இல்லாமல் கிழிந்து அவல நிலையில் நிற்கும் என்பது மட்டும் உண்மை.!

🌹🌹இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற

ஆசை சிலருக்கு

இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை பலருக்கு.!!

🌹🌹🌹நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் இன்று யாரோவாக பார்க்கப்படுன்றோம் என்று உணர்ந்தால் அடுத்த நொடி அமைதியாக விலகி விடுவது நல்லது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'மத்திய, மாநில அரசுகளின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவும் அளித்து வருகிறது.அதேசயம், கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள், ஆசிரியர், அரசு ஊழியர்களால் எழுப்பப்பட்டு வரும் அச்சங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும், உயிரிழப்பு குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது.கொரோனா தடுப்பூசியின் உயிர் பாதுகாப்பு குறித்தும், மருந்தின் நம்பகத்தன்மை குறித்தும் அனைத்துத் தரப்பினரும் திருப்தி கொள்ளும் வகையில் விளக்கம் தரப்பட வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களைக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கட்டாயப்படுத்தக் கூடாது''

இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

⛑⛑மே 3-ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்கும் -பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

⛑⛑G.O-23-ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு

⛑⛑பள்ளிக் கல்வி- IGNOU பல்கலைக்கழகம் மூலம்  ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு (PGDET)- சார்ந்து- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

⛑⛑9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

⛑⛑பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு இன்றி மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி என, உரிய விதிகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர்

⛑⛑எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நடப்பு ஆண்டு, 'நீட்' தேர்வை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்தும் திட்டம் இல்லை. வரும், ஜூன் - ஜூலையில், வினாத்தாளில் கையால் எழுதும் வழக்கமான நடைமுறையிலேயே, தேர்வு நடத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

⛑⛑'பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி சட்டசபை தேர்தல் பணிகளில் இருந்து மதுரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,' என மாவட்ட ஆட்சியரிடம்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

⛑⛑கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கும் வாரிசுக்கு விரைவில் வேலை: அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

⛑⛑தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வழக்கு -மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

⛑⛑சென்னை சிப்காட் நிறுவனத்தில் உதவி பொறியாளர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-03-2021

⛑⛑மாணவர்களுக்கு வழங்க முயன்ற இலவச ஸ்கூல் பேக்குகள் பறிமுதல்-தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.

⛑⛑ தேர்தல் பயிற்சி கால அட்டவணை வெளியீடு 

18.03.21 வியாழன்

26.03.21 வெள்ளி

3.4.21 சனி

5.4.21 திங்கள்

⛑⛑சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக்கோரி தி.நகர் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சசிகலா அறிவிப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, மறு பரிசீலனை செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை

⛑⛑ஓடிடி தளங்களை முறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை விதிகளை இன்றுக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.

-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

⛑⛑6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் 

6 தொகுதிகளை பெற விசிகவில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு 

- திருமாவளவன்

⛑⛑லலிதா ஜுவல்லரி தொடர்புடைய 10கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

⛑⛑புதுச்சேரியில் என்.ஆர்.காங். - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி

தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு  எட்டப்படவில்லை என தகவல்.

⛑⛑சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி.

⛑⛑அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். 

தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

- தலைமைத் தேர்தல் அதிகாரி

⛑⛑திமுக உடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.

இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும்.எத்தனை தொகுதிகள் என்பதை அப்போது தெரிவிக்கிறோம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

⛑⛑இன்று காலை 9 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும்

- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

⛑⛑80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் 12 D படிவத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

⛑⛑ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு.

⛑⛑தமிழகத்தில் பாஜக செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதே என்னுடைய முக்கியப் பணி; காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேட்டி.

⛑⛑ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சூளுரை

⛑⛑கோவாக்சின் தடுப்பூசி 81 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளதாக மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவில் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு.

⛑⛑இந்தியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் போராட்டக்காரா்களுக்கான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த வார மாா்ச் 8 விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

⛑⛑அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

⛑⛑சீனாவில் வரும் ஜூன் மாதத்துக்குள் 40 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

⛑⛑சென்னை வந்தடைந்த ‘தல’ தோனிக்கு உற்சாக வரவேற்பு 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி புதன்கிழமை  சென்னை வந்தடைந்தார்.

⛑⛑அம்மாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா முடிவை அறிவித்துள்ளார்

கே.பி முனுசாமி அதிமுக

⛑⛑அதிமுகவை உரசிப்பார்க்க வேண்டாம்: 

எல்.கே.சுதீஷுக்கு வைகைச் செல்வன் கண்டனம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...