கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரலில் உச்சம் பெறும் கொரோனா 2ம் அலை தாக்கம் என கணிப்பு...



 கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 50,000க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆய்வு நடத்தியது. அதில் கூறியுள்ளவை, “கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இது 100 நாட்கள் வரை நீடிக்கும்.


இரண்டாம் அலை கொரோனா காரணமாக நாட்டில் உள்ள 25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒரே நாளில் அதிகமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் உச்சம் பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்திய அரசின் அறிவிப்பு படி கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பரவல் அதிகமாக உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...