கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - இந்த மாதத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதி...

 தமிழகத்தில் கடந்த 6 ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த 6 ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பணியில் அரசு துறைகளை சேர்ந்த வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , பள்ளிக்கல்வித்துறை , வேளாண்மைத்துறை , சுகாதாரத் துறை , கூட்டுறவு துறை போன்ற 20 க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த நாளில் வேலை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 6 ம் தேதி தேர்தல் நாளில் பணியாற்றிய அனைத்து வகையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாத்திற்குள் ஒருநாள் சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...