கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - எந்தெந்த துறைக்கு 2021 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது...

 மத்திய அரசு ஊழியர்களுக்கான, டி.ஏ., எனப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 


மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்திற்கு, 105 ரூபாயிலிருந்து, 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 1.50 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர். இந்த புதிய அகவிலைப்படி உயர்வானது, 2021 ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டமிடப்பட்ட வேலை களுக்கான ரயில்வே, சுரங்கம், எண்ணெய் வயல், முக்கிய துறைமுகங்கள் ஆகியவற்றின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசால் நிறுவப்பட்ட கழகங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய விகிதமும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...