கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆன்லைன் தேர்வு முடிவுகள் முறைகேடு குறித்து முதல்வர் இன்று மாலை அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி...

 


கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் தேர்வு, அரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இன்று மாலை முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


 

கொரோனா காலமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தேர்தலுக்கு முன் நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது.



இந்நிலையில் புதிதாக உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்வுகள் பிரச்சினை தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில் பலவித பிரச்சனைகள், பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.



தொடர்ந்து மாணவர்கள் தரப்பிடம் அவர்களது கருத்துக்களை கேட்டறியப் பெற்று இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prize giving ceremony for CM Trophy sports competitions

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுதல் : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கடிதம் Prize giv...