கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்த அறிக்கை - இந்திய சுகாதாரத்துறையின் வெளியீடு...



 தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்த அறிக்கை - இந்திய சுகாதாரத்துறையின் வெளியீடு...


கருத்தாக்கம்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


17.5.2021 


கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு 


இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே 

ரத்தப்போக்கு மற்றும் ரத்த கட்டிகள் உருவாகுதல் தன்மை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. 


தேசிய தடுப்பூசிகள் சார்ந்த பக்கவிளைவுகளை ஆராயும் குழுவின் ஆய்வறிக்கை - மத்திய சுகாதாரத்துறைக்கு பணிந்து சமர்ப்பிக்கப்பட்டது. 


 கடந்த 11 மார்ச் 2021 அன்று ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை பெற்றவர்களிடத்தில்  பிரிட்டனிலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும்  அரிதினும் அரிதாக  ரத்த கட்டிகள் உருவாகி இருந்தது குறித்து பரபரப்பாக பேச்சு எழுந்தது. 


இதன் பொருட்டு இந்தியாவிலும் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு குறித்தும் கோவேக்சின் தடுப்பூசி குறித்தும் அவை உண்டாக்கும் பக்கவிளைவுகள் குறித்தும்   விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


அதில் 

3.4.2021 வரை


7,54,35,381 தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 

அதில் 6,86,50,815 கோவிஷீல்டும் 

67,84,562 கோவேக்சினும் போடப்பட்டிருந்தது 


அவர்களிடையே 

6,59,44,106 முதல் டோஸ் 

94,91,275 இரண்டாவது டோஸ் 


தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோவின் இணையதளத்தில் இந்தியாவில் 753 மாவட்டங்களில்  684 மாவட்டங்களில் இருந்து  மொத்தம் 23,000 பக்கவிளைவுகள் பதிவு செய்யப்பட்டன.


இவற்றுள் 700 பக்கவிளைவுகள் மட்டுமே தீவிர தன்மை மிக்கவையாக இருந்துள்ளன 


இது  பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் 9.3 என்ற அளவில் வருகிறது 


(9.3/one million doses administered) 


இவற்றுள் 498 தீவிர பக்க விளைவுகள் ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 

இவற்றுள் கோவிஷீல்டு போடப்பட்டவர்களுள் 26 ரத்த கட்டிகள் உருவாகும் நிகழ்வுகள் கண்டறியப்பட்டன. 


இது பத்துலட்சம் பேரில் 0.61 என்ற அளவில் நிகழ்ந்துள்ளது 

( 0.61 thrombo embolic events in one million doses of covishield ) 


கோவேக்சின் போடப்பட்டவர்களில் ரத்த கட்டிகள் ஏற்படும் நிகழ்வுகள் தோன்றவில்லை 


எனவே பக்கவிளைவுகள் ஆய்வு அறிக்கை கூறுவதாவது 


கோவிட் தடுப்பூசிகள் போடப்படுவதால் 

மிகவும் குறைவான அளவு  ஆனால் நிச்சயமாக ரத்த உறைதல் தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


There is a very miniscule but definitive risk of thrombo embolic events 


இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகள் மூலம் 

ரத்த கட்டிகள் உருவாவதற்கான ரிஸ்க் 

0.61 / ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு 


இதே பிரிட்டனில் 

4/ ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு 


இதே ஜெர்மனியில் 

10/ ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு என்று தெரியவருகிறது. 


இதில் இன்னொரு விசயமும் கவனிக்க வேண்டியிருக்கிறது 


தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு பொதுவாகவே 

ஐரோப்பிய மக்களை விட 70 சதவிகிதம் ரத்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இது மரபணுக்கள் தரும் சாதகமாகப் பார்க்கப்படுகின்றது 


 

இதன் காரணமாகவும் இந்தியாவில் மிக மிக குறைவான அளவில் கோவிட் தடுப்பூசி சார்ந்த ரத்த உறைதல் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். 


எனினும் அரிதினும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும் இது குறித்து மக்களுக்கு முறையான அறிவை வழங்குவது  மருத்துவர்களின் கடமையாகும் 


எனவே இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசிகளைப் ( குறிப்பாக கோவிஷீல்டு)  பெற்ற 20 நாட்களுக்குள் 

ரத்த உறைதல் தன்மைக்கான பின்வரும் அறிகுறிகளை யாரேனும் வெளிப்படுத்தினால் உடனே மருத்துவர்களை அணுகிட வேண்டும். 


1. மூச்சு விடுவதில் சிரமம் 

2. நெஞ்சுப்பகுதியில் வலி 

3. கை கால்களில் வலி குறிப்பாக கணுக்கால் பகுதி மற்றும் கை புஜத்தில் வலி / அழுத்தினால் வலி ஏற்படுவது 

4.ஊசி போட்ட இடத்தில் சின்ன சின்ன சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுவது 

5. தொடர் வயிற்று வலி ( வாந்தி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்) 

6. ஏற்கனவே வலிப்பு நோய் வரலாறு இல்லாதவர்களிடையே வலிப்பு ( கூட வாந்தி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்) 

7.ஏற்கனவே மைக்ரேன் மற்றும் தொடர் தலைவலி வரலாறு இல்லாதவர்களிடையே தொடர் தலைவலி ஏற்படுவது ( வாந்தி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்) 

8. ஒரு பக்க கை கால் வாதமாகுதல்/ முக வாதம்

9. எந்த காரணமுமின்றி தொடர்ந்து வாந்தி வருதல் 

10. கண்கள் இரண்டாகத்தெரிவது/ கண்கள் பார்வையற்றுப் போவது/ மங்கலாகத் தெரிவது 

11. மனப்பிதற்றல் நிலை/ மூர்ச்சை நிலை / சுயநினைவு குன்றுதல் தன்மை

12. இவையன்றி தடுப்பூசி பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ கண்டறியும் குறிப்பிடத்தகுந்த அறிகுறிகள் எதுவாயினும் 

உடனே  மருத்துவமனையை நாட வேண்டும். 


கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்த ரத்த உறைதல் பக்க விளைவுகள் அரிதினும் அரிதாக தோன்றுபவை 

அதாவது பத்து லட்சம் பேரில் 0.61 என்ற அளவில் தோன்றுபவை 


ஆனால் 

கொரோனா தொற்று அதே பத்து லட்சம் பேருக்குப் பரவினால் 

168000 பேருக்கு ரத்த உறைதல் தன்மையை உருவாக்கி கட்டிகள் உருவாக்கும் நோயாகும். 


0.61எங்கே இருக்கிறது

168000 எங்கே இருக்கிறது 


கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு தவணை போடப்பட்ட பலர் 

ஏன் ஒரு தவணை போடப்பட்ட பலரும் கூட சாதாரண மற்றும் மிதமான கொரோனா நிலையில் மீண்டு வருவதைக் காண முடிகிறது 


நிச்சயம் அதன் பலன் இந்த பெருந்தொற்று காலத்தில்  மிக மிக அதிகமாக இருக்கிறது 


எனினும் அதன் அரிதினும் அரிதான இந்த பக்கவிளைவுகளையும் அவற்றை இனங்கண்டு உடனே மருத்துவமனைக்கு வருவதையும் உறுதி செய்ய வேண்டும். 


தடுப்பூசிகளினால் தீவிர கொரோனாவில் இருந்து பலரும் காக்கப்பட்டு வருகின்றனர் 


அரிதினும் அரிதான பக்க விளைவுகளை எண்ணி அஞ்சி தடுப்பூசியை புறக்கணித்தல் கூடாது. 

காரணம் கொரோனா ஏற்பட்டால் அதை விட பலமடங்கு ரத்த கட்டிகள் ஏற்பட அதிகமான ரிஸ்க் உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 


இந்த அரிதினும் அரிதான பக்கவிளைவுகளுக்கு முறையான சிகிச்சையும் உண்டு. பத்து லட்சம் பேரில் 0.61 நபருக்கு நடக்கும் இந்த விசயத்தைக்கூட வெளியில் உண்மைத்தன்மை விளங்கக் கூறுவது அந்த ஒரு நபரும் உடனே தனது அறிகுறிகளை இனங்கண்டு சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகவே ஆகும். 


எனது குடும்பத்தில் 

நான் 

எனது மனைவி 

எனது தந்தை தாய் 

ஆகிய அனைவரும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் பெற்றோம் 


இந்தியாவில் போடப்பட்டுள்ள கோவிஷீல்டு   டோஸ்கள் 

16,47,31,001 


கோவேக்சின் டோஸ்கள் 

1,90,74,959 


ஆக மொத்தம் 

18,38,06,029 

டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன 


தயவு செய்து கொரோனாவின் கொடிய தாக்கத்தில் இருந்து மீண்டு வர தடுப்பூசி பெற்றிடுங்கள் 


அரிதினும் அரிதாக நிகழும் பக்கவிளைவுகளை எண்ணி அஞ்சாமல் அவற்றையும் கவனித்தில் கொண்டு

 தடுப்பூசி பெற்றிட முன்வாருங்கள் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 ( RL / RH List 2025)

  Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)... &...