கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது...?

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது...?


தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்று குறைந்து வருவதை அடுத்து மேனிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கடந்தஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் அனை த்தும் மூடப்பட்டன. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 9ம்  வரை தொடங்கப்படாமல் மாணவ,மாணவியர் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகளும் நடத்த முடியாமல் போனது. அதனால் அந்த  வகுப்பில் படித்து வந்த மாணவ,மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.



தேர்தலுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா  வைரஸ் தொற்றின் பரவல் தீவிரம் அடைந்ததால் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 50 சதவீதம் இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 2021-2022ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் சேர்க்கையும் கடந்த 14ம் தேதியில் இருந்து நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் இலவசப் பாடப்புத்தகங்கள் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு இன்று வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. புத்தக வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்ததுடன்  கல்வித் தொலைக்காட்சியையும் தொடங்கி  வைத்தார்.

கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்ப பள்ளிகள் அனைத்து தயார்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜூலை  முதல் பள்ளிகள்  திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து விட்டது. இருப்பினும் கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்து தொடங்கும் என்று சுகாதார வல்லுநர்கள் நம்புவதால், தற்போதைக்கு கீழ் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக மேனிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...