கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kendriya Vidyalaya பள்ளி - மாணவர் சேர்க்கை கால அட்டவணை வெளியீடு...

 


Kendriya Vidyalaya பள்ளி - மாணவர் சேர்க்கை கால அட்டவணை வெளியீடு...


கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து கே.வி., சங்கதன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுதும் உள்ள கே.வி., பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விதிகளின்படி, தகுதி பெற்றவர்களின் முதல் பட்டியல் வரும், 23ம் தேதி வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் ஜூன் 30; மூன்றாவது பட்டியல் ஜூலை 5ல் வெளியிடப்படும். 


முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்களுக்கான பட்டியல் ஜூலை 2ல் வெளியாகும். இவற்றில் மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களுக்கு, ஜூலை 8 முதல், 12 வரை விண்ணப்ப பதிவுகள் நடக்கும். ஜூலை 13 முதல், 16க்குள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


இரண்டாம் வகுப்புக்கு, ஜூன் 24ல் பட்டியல் வெளியாகும். ஜூன் 25 முதல், 30க்குள் மாணவர் சேர்க்கை நடக்கும்.பிளஸ் 1 தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலியான இடங்களில் ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும்.பிளஸ் 1க்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் பதிவுகள் துவங்கி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 - கணிதம் - வினாத்தாள் & விடைகள்

  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 - கணிதம் - வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் 10th Standard Public Examination 2025 - Mathematics - Qu...