கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செப்டம்பர் 1 (01-09-2021) முதல் நேரடி வகுப்பாக பள்ளிகள் திறப்பு ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்...

 


01-09-2021 முதல் நேரடி வகுப்பாக பள்ளிகள் திறப்பு ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்...


மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.


 பள்ளிகள் செல்லாமல் மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். 


மேலும் , இணையம் மூலமாக நடத்தப்படும் Online வகுப்புகள் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1 ம் தேதி முதல் 9 , 10 , 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ( Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது..


மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


>>> "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு

  கல்லூரிக் கனவு கையேடு  Kalloori Kanavu Guide - College Dream Guide >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...