கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் மீண்டும் கொண்டுவர பரிசீலனை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...

நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறியவும், பள்ளிகளில் கற்றலை மேம்படுத்தவும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, துறையின் மூத்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 180க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள், கல்வி பணியாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயற்பியல் படித்த ஆசிரியர்கள் உயிரியல் உள்ளிட்ட வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது என நடைமுறைப் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். ஆசிரியர்கள் மட்டுமல்லாது கல்வி பணியாளர்கள் தங்களது பிரச்னைகளை எடுத்துரைத்தனர். ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய முடிவு உடனடியாக எடுக்கப்படும்.ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். பணி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆண்டுக்கு மூன்று முறை குறைதீர் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் நடத்தப்பட வேண்டும், ஆனால் இதுவரை அது நடத்தப்படாமல் உள்ளது. கல்வித்துறை சார்ந்த சிறிய அளவிலான பிரச்னைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சரிப்படுத்த வேண்டும். நிதி செலவு ஏற்படும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்" என்றார். கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



 ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் மீண்டும் கொண்டுவர பரிசீலனை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...




>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...