கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெற்ற இந்திய ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வைக் கணக்கிடுவது எப்படி?



 கடந்தாண்டு ஜனவரி முதல் இந்தாண்டு ஜூன் வரையில் ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை எவ்வாறு கணக்கிட்டு வழங்குவது என்பது பற்றிய புதிய உத்தரவை ஒன்றிய நிதியமைச்கம்  பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 17 சதவீத  அகவிலைப்படியை ஒன்றிய அரசு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 28 சதவீதமாக உயர்த்தி வழங்கி வருகிறது. அதோடு,  நிவாரணப் படியையும் அதிகரித்து இருக்கிறது. கடந்தாண்டு கொரானோ  பரவல் காரணமாக, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்காமல், நிறுத்தி வைத்தது. வழக்கமாக, இதுபோன்ற சூழல்களில் இந்த படி உயர்வுகள் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.



ஆனால், இம்முறை 2021, ஜூலை 1ம் தேதியில் இருந்து மட்டுமே அகவிலைப்படி, நிவாரணப் படி உயர்வு வழங்கப்படும் என ஒன்றிய அறிவித்துள்ளது. இதனால், 2020ம் ஆண்டு ஜனவரி முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், கடந்த புதன்கிழமை ஒன்றிய நிதியமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், இந்தாண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்கு மட்டுமே 28 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற ஆண்டு, மாதங்களை கணக்கிட்டு, 21 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

*  2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 21 சதவீத (17+4) அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும்.

* 2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து 2021, ஜூன் 30ம் தேதி வரையிலான காலங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே 28 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இவர்களுக்கு 2020ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் 21 சதவீதமும், (17+4), 2020ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் 17+4+4 என்ற அளவிலும், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  முதல் ஜூன் 30ம் தேதி வரையில் மேலும் 3 சதவீதமும் கூட்டி, 28 சதவீதம் வழங்கப்படும்.

* இது  தவிர, பயன்படுத்தப்படாத விடுமுறைகளுக்கான தொகையும் வழங்கப்படும்.

* 2020ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி  முதல் 2020ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி வரையில் ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு 25 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இவர்களுக்கு 2020ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் 2020ம் ஆண்டு ஜூன் 30 வரையில் 21 சதவீதமும் (17+4), 2020ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து  2020, டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டத்துக்கு கூடுதலாக மேலும் 4 சதவீதமும் அளிக்கப்படும்.


>>> 01-01-2020 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சதவீதத்தில், ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கொடை கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான மத்திய அரசின் செயல்முறைகள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...