கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...

 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்...


பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்படுவர்...


ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்...


- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...






முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.



அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்


ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்


அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்


புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்.


சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்.


அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்.


வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.


அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்.


முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...