கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-10-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: அறிவுடைமை

குறள் : 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

பழமொழி :

Trust not to a broken staff.


மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

இரண்டொழுக்க பண்புகள் :

1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.

 2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.

பொன்மொழி :

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ , அவ்வளவு காலமும் எப்படி வாழ்வது என்று கற்றுக் கொண்டேன் இருங்கள்

_ ராபின் சர்மா.


பொது அறிவு :

1.மிக நீண்ட தொலைவு இடம் பெயரும் பறவை எது? 

ஆர்டிக் டெர்ன்(35,000 Km).

2."வானளாவிய கட்டட நகரம்" என்று அழைக்கப்படுவது எது?

நியூயார்க்.

English words & meanings :

Drop the ball - to make a mistake, 

down the road - in the future

ஆரோக்ய வாழ்வு :

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்ட தூதுவளை !!


* தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டுபூகாய்கனிவற்றல்இருமல்சளி முதலிய நோய்களிலிருந்தும்கண் நோய்எலும்பு நோய்காது நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 *  தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும்இலைகளைத் துவையல்குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும்இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளிஇருமல்நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.

 * தூதுவளை கீரையை சமையலில் சாம்பார்ரசம்துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம்இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம்சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்னை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்

கணினி யுகம் :

Ctrl + : - Insert Current Time

Ctrl + ; - Insert Current Date

அக்டோபர் 11

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் 


பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl ChildDay of the GirlInternational Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின்  பிந்தநாள் 



மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 111826 - சூலை 211889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 

ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான். 

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது. 

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! 

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமுக்கு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான். 

வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான். 

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது. 

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார். 

நீதி :
உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

09.10.21

★சிக்கல்நாயக்கன்பேட்டை, கருப்பூர் கலம்காரி துணி ஓவியத்துக்கு புவிசார் குறீயீடு.

★மத்திய தொல்லியல் துறை சார்பில் நேற்று முதல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி தொடக்கம்: உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை.

★அகில இந்திய அளவில் பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

★நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

★மின்சார பற்றாக்குறையால் லெபனான் நாடு முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

★ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.

★காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இந்த போட்டியில்  இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி  அணிகள் பங்கேற்காது என ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

★தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன்: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

 🌸 Geographical code is given for Sikkalnayakkanpet, Karuppur Kalamkari cloth painting. 

 🌸 Excavation work on behalf of the Central Archaeological Department begins yesterday at Adichanallur: Action being taken to set up a world-class museum.

 🌸 The High Court has queried the Central Government about the steps taken to ban plastics on an all-India basis.

 🌸There is a risk of power generation being affected in various states due to coal shortages.

 🌸 Lebanon is in darkness across the country due to power shortages.

 🌸 Earthquake in Afghanistan: 4.4 on the Richter scale.

 🌸 The Commonwealth Games is set to take place in the UK next year.  Hockey India has announced that Indian men's and women's hockey teams will not be participating in the tournament.

 🌸 Thomas and Uber Cup Badminton: India beat Spain.
 Prepared by
Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...