கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று    
   
விளக்கம்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.


பழமொழி :

Silence is the loudest tool of a thinking mind.

யோசிக்கும் மனதின் அதிபெரிய கருவி அமைதி தான்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

அதிக அதிகாரம் உள்ளவர் அதை மிக மென்மையாக பயன்படுத்த வேண்டும் - செனீக்கா


பொது அறிவு :

01. உலக தடகளப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

           அஞ்சு பாபி ஜார்ஜ்-

             நீளம் தாண்டுதல்

   Anju  Bobby George-  Long jump

02. தென்னிந்தியாவின் எல்லோரா  என்று அழைக்கப்படும் இடம் எது?

             கழுகுமலை-தமிழ்நாடு

             Kalugumalai - Tamilnadu


English words & Tips :

Trustee – தர்மகர்த்தா, பொறுப்பாளி.

  Trust –நம்பிக்கை


Grammar Tips:

Phrase
Under lock and key

Usage
She keeps her jewellery under lock and key

I keep all my secrets under lock and key


அறிவியல் களஞ்சியம் :

பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல் 1.3 X 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது.


ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.


நீதிக்கதை

எதிர்கால வாழ்க்கை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜவவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன்3 எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.

அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.


இன்றைய செய்திகள்

03.07.2025

⭐3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணி துவங்கி உள்ளது.

  ⭐அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

⭐இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

⭐தெற்காசிய நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சார்க் அமைப்பு செயலிழந்துள்ள நிலையில் தற்போது புதிய அமைப்பை உருவாக்க சீனா முயற்சி எடுத்து வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2வது டி20 போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்.


Today's Headlines

✏️The work of upgrading the Chennai Port Ship Terminal to handle 3,000 passengers has begun at a cost of Rs. 19.25 crore.

✏️New restrictions for foreign students studying in the US.

✏️US President Trump announces a trade deal with India at a low tariff soon.

✏️With the SAARC organization to promote integration among South Asian countries in a dysfunctional state, China is currently trying to create a new organization.

*SPORTS NEWS*

🏀 2nd T20 - Jemimah Rodrigues, Amanjot Kaur,who leads to india's victory.

🏀 Wimbledon Tennis: 23 top players who crashed out in the first round.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.

விளக்கம்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.


பழமொழி :
Every drop of effort fills the bucket of success.

ஒவ்வொரு முயற்சியும் வெற்றியின் வாளியை நிரப்பும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

எல்லையற்ற அதிகாரம் அபாயகரமான முறைகேட்டில் முடியும் - எட்மண்ட் பர்க்


பொது அறிவு :

01. இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற பானிபட் என்ற இடம் எந்த மாநிலத்தில் உள்ளது?                

             அரியானா (Haryana)

02.  இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகம் எது?     

                 மும்பை-மகாராஷ்டிரா

                Mumbai - Maharashtra


English words & Tips :

Race - competition between people or vehicle. பந்தயம், இனம்

* Raise - to lift or move, உயர்த்துதல்


அறிவியல் களஞ்சியம் :

புவிப்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதம் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீர் பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள்


ஜூலை 02

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.



நீதிக்கதை

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?

என்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.


இன்றைய செய்திகள்

02.07.2025

⭐யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்- மு.க.ஸ்டாலின்.

⭐காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு.

⭐மத்திய அரசின் ஆலோசனையின் படி, வட சென்னையின் வியாசர்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டு உள்ளது.

⭐விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி- முதலமைச்சர் உத்தரவு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.

🏀
இங்கிலாந்து- இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.


Today's Headlines

✏️Proud moment of "Naan Muthalvan scheme" - 50 out of 57 candidates who cleared the UPSC exam.

✏️As per the advice of the Central Government, the service of 120 electric buses has been started from the Vyasarpadi workshop in North Chennai.

✏️Rs. 4 lakh relief fund for the families of those who died in the Virudhunagar cracker factory explosion - Chief Minister ordered.

✏️Israeli attack on people waiting for food in Gaza leaves 74 innocent civilians dead.

*SPORTS NEWS*

🏀 ICC T20 Batting Rankings: Smriti Mandhana moves up to 3rd position.

🏀 England-India 2nd Test begins in Birmingham tomorrow


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை  

விளக்கம் : அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

 
பழமொழி :
The mind grows when questions bloom.

கேள்விகள் மலரும் போது மனம் வளர்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

கட்டளையிடும் பதவி வேண்டுமானால் முதலில் கீழ்ப்படியக்  கற்றுக் கொள்ளுங்கள் - விவேகானந்தர்


பொது அறிவு :

01.புகழ் பெற்ற மதுராந்தகம் ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது? 

          செங்கல்பட்டு மாவட்டம்

          Chengalpat  district

02. இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டு வங்காள விரிகுடாவில் எத்தனை தீவுகள் உள்ளன?

           572  தீவுகள்

          572   Islands


English words & Tips :

callous-கடுமையான

heartless- இரக்கமற்ற



Grammar Tips:

There are seven coordinating conjunction which can be easily remembered by a word

FANBOYS

For
And
Nor
But
Or
Yet
So


அறிவியல் களஞ்சியம் :

காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல்நோக்கி தூக்கச் செல்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகருகிறது. இந்தக் காற்றின் செயல்பாடே பறவையை மேல்நோக்கி உயரச் செய்து பறக்க வைக்கிறது.


ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.



கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை


நீதிக்கதை

துன்பம்!

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!


இன்றைய செய்திகள்

01.07.2025

⭐தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது 'வாட்டர் பெல்' திட்டம்.

⭐இளம் வயதினருக்கு வரும் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்றே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

⭐கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்  கோலாகல தொடக்கம்: சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு.

🏀கிரேட் அமெரிக்கன் பால் பார்க்கில் சின்சினாட்டி ரெட்ஸ் அணி சான் டியாகோ பேட்ரெஸை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பின்தங்கிய நிலையில் வந்தது. 9வது போட்டியில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கிய ஸ்பென்சர் ஸ்டீர் ஆட்டத்தை சமன் செய்தார்.


Today's Headlines

✏️ The 'Water Bell' scheme was implemented in schools in Tamil Nadu.

✏️ The Tamil Nadu government has announced a special incentive of ₹297 crore for those engaged in sugarcane farming.

✏️ Doctors reported as  HPV virus infection is the cause of cancer in young people

✏️ Central government announces 8.2% interest rate for small savings schemes

*SPORTS NEWS*

🏀Wimbledon Open Tennis: Rs. 35 crore prize money for the champion.

🏀 The Cincinnati Reds came from behind to beat the San Diego Padres 3-2 at Great American Ball Park. Trailing 2-1 in the 9th, Spencer Steer tied the game.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.


பழமொழி :
" Learning is a journey,not a race."

கற்றல் என்பது ஓட்டப்போட்டி அல்ல, ஒரு பயணம்."


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

மக்கள் சமுதாயத்தில் புரட்சிகள் உண்டாகும் போது, அந்தச் சமுதாயம் பழையன களைந்து புது வாழ்வு தொடங்க ஏதுவாகிறது - ரூசோ


பொது அறிவு :

01. தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?       

               1987 ஆம் ஆண்டு

02. இந்தியாவில்  உப்பு நீர் அதிகம் ஏரிகள் உள்ள மாநிலம் எது?               

               ராஜஸ்தான் (Rajasthan)


English words :

economy.    -    பொருளாதாரம்

genuine      -     நேர்மையான


அறிவியல் களஞ்சியம் :

"முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.

மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது."


ஜூன் 30

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.



நீதிக்கதை

மனத்திருப்தி

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.

ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது.“ ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் “அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.” என்றார்.

“இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” என்றார் கல்தச்சர்.

அதற்கு “ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்றார் வழிப்போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”.

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.


இன்றைய செய்திகள்

30.06.2025

⭐ பேருந்துகளில் படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்பவர்கள் (மாணவர்கள்) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

⭐10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு.

⭐இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் டஜன் கணக்கான உயிர்களைக் கொன்றன. காசாவில் சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்  பொதுமக்களை இழந்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டன் டென்னிஸில் 25வது ஸ்லாம் பட்டத்தை வெல்ல நோவக் ஜோகோவிச் இலக்கு.

🏀 கிரிகெட்-
செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ் அணி 1-6 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில், கிளீவ்லேண்டை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


Today's Headlines

✏️The Madurai bench of the High Court has ordered the police to register case and take action against those (students) who travel by standing on the stairs of bus or hanging on the  buses.

✏️ Public exams for class 10 students to be held twice a year from now on. CBSE announcement.

✏️ Israeli airstrikes kill dozens. Recent Israeli airstrikes in Gaza have claimed the lives of civilians
.
SPORTS NEWS

🏀Novak Djokovic aims for 25th Slam title at Wimbledon.

🏀 Cricket- St. Louis Cardinals came from 1-6 down to beat Cleveland 9-6.

Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்


பழமொழி :
Humility is the best virtue.

அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நூறு முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதைவிட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருப்பது மேல். - ஸ்டீபன் ஸ்மித்


பொது அறிவு :

01. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

பாரிஸ்-பிரான்ஸ்
Paris- France

02. சென்னையில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

கொசஸ்தலை ஆறு -திருவள்ளூர்
Kosasthalaiyaru - Thiruvallur



English words & Tips :

calamity     -     பேரழிவு

barriers     -     தடைகள்


Grammar Tips :

Collective nouns refer to groups of people, animals, or things considered as a single unit. So they often take a singular verb when referring to the group as a whole, but can take a plural verb when referring to the individual members.

Singular verb e.g., "The team is playing well".

Plural verb: when referring to the individual members within the group
Eg. "The team members are arguing about strategy".



அறிவியல் களஞ்சியம் :

மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.


ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். 


பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நீதிக்கதை

வலிமை!

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது. பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.


இன்றைய செய்திகள்

27.06.2025

⭐ தமிழகத்தில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

⭐அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐டிரம்பை சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி நெதர்லாந்தில் 2 நாட்கள் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில், டச்சு மன்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு. உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர, டிரம்புடன், ஜெலன்ஸ்கி சந்தித்து பேச உள்ளதாக தகவல்.

⭐வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு
பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகளம்; தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

✏ A Tamil Nadu government order has been issued approving the start of dialysis treatments in 50 primary health centers in Tamil Nadu.

✏ The Tamil Nadu government has issued a government order providing 4% quota for the differently abled in government job promotions.

✏ Chief Minister M.K. Stalin inaugurated the government multi-purpose high-speciality hospital built at a cost of Rs. 198 crore in Vellore.

✏ Zelensky is reportedly set to meet with Trump at the two-day NATO summit in the Netherlands.

SPORTS NEWS

🏀 Ostrava Golden Spike Athletics; Neeraj Chopra wins gold.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார். பெருமாமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.


பழமொழி :
Focus is the quiet power behind success.

கவனம் தான் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் அமைதியான சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

புத்திசாலிகள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள் - பிரான்சிஸ் பேகன்


பொது அறிவு :

01.தமிழ்நாட்டில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்குள்ளது?          

          ஆனைகட்டி- கோயம்புத்தூர்

          Anaikatti- Coimbatore

02. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

                   கோதாவரி(Godavari)


English words & Tips :

abstain    -     விலகி இரு

decency.     -     கண்ணியம்


Grammar Tips;

When G is followed by e,i,u, It makes the sound/j/

Gem giant, gym



அறிவியல் களஞ்சியம் :

* நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

* நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

* நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.


ஜூன் 26

ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் முறையற்ற பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் கொண்டாடப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட இந்த நாள், போதைப்பொருள் இல்லாத உலகத்தை நோக்கி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிக்கிறது.


நீதிக்கதை

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:

கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.



இன்றைய செய்திகள்

26.06.2025

⭐சென்னையில் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு திட்டமிட்டுள்ளது.

⭐காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

⭐விண்வெளிக்கு சென்றார் இந்திய விண்வெளி வீரர்"சுபான்ஷூ சுக்லா".

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் திலீப் ஜோஷி காலமானார்.

🏀 கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அபாரம்.


Today's Headlines

✏️ The Tamil Nadu government has decided to install floating solar panels in all three lakes in Chennai - Poondi, Puzhal and Chembarambakkam - to generate electricity.

✏️ Due to continuous rains in the Cauvery catchment areas, the water inflow to Kabini Dam has increased. While 20,000 cubic feet of water is coming in, 25,000 cubic feet of water is being released. Due to this, the water inflow in the Cauvery river at Okenakkal has increased.

✏️ Indian astronaut "Subhanshu Shukla" went to space.

*SPORTS NEWS*

🏀 Former Indian cricketer Dilip Joshi passes away.

🏀 Cricket First Test Match: England is amazing.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.    

விளக்கம் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.


பழமொழி :
Don't judge a book by its cover.

புறதோற்றத்தைப் பார்த்து உள்ளதைக் கணிக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

புத்திசாலித்தனம் பெரிய வேலைகளை ஆரம்பித்துத் தான் வைக்கிறது. அதை முடித்து வைப்பது உழைப்புதான் - கோபர்ட்


பொது அறிவு :

01.இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

       உத்திர பிரதேசம்(Uttar pradesh)

02. உலகிலேயே அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?

                     சீனா(China)


English words & Tips :

angry   -     கோபம்

agent       -    முகவர்


Grammar Tips :

Use preposition

at    for places ( small areas and location)
In. For places ( large area)



அறிவியல் களஞ்சியம் :

பால் கொதித்தால் பொங்குகிறது. ஆனால் தண்ணீர் அப்படி ஆவதில்லை. இதற்கு காரணம் பால் கொதிக்கும்போது அதிலுள்ள கொழுப்பு, புரதம் போன்றவை அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் பாலாடையாக படர்கின்றன. இது பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்ததும் நீராவியாக மேலே எழுவதை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி, பாலாடையை தள்ளி மேலே எழும்பி வெளியேறுகிறது. இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால் நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும்.


ஜூன் 25

வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள்

விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்


நீதிக்கதை

செய்யும் செயலில் அவதானம் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது. என் போன்ற மற்றப் பெண்களெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்க தக்கதாக  உல்லாசமாக இப்படி நடப்பேன், என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து வீசி ஸ்டையிலாக நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது.

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.


இன்றைய செய்திகள்

25.06.2025

⭐9 மாவட்ட
கலெக்டர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.

⭐சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  ரயில் மூலம் காட்பாடி பயணம்: வேலூர், திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

⭐ பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சுமார் 1,07,677 வண்டல் வடிகட்டி தொட்டிகளை தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஹெடிங்லி டெஸ்ட்: இந்தியா VS இங்கிலாந்து -5வது நாள் த்ரில் தொடர்கிறது.

🏀ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா  செக் குடியரசின் ஆஸ்ட்ராவாவில் நடைபெறும் மதிப்புமிக்க கோல்டன் ஸ்பைக் போட்டியில் இடம்பெறுகிறார்.


Today's Headlines

✏️Tamil Nadu government ordered  55 IAS officers, including 9 district collectors tobe transferred:

✏️  Tamilnadu state Chief Minister M.K. Stalin will travel by train from Chennai to Katpadi for a 2-day trip: He will participate in various programmes in Vellore and Tirupattur.

✏️As a precautionary measure for the monsoon, dredging and waste removal work is being carried out in water bodies, canals, rainwater drains and in approximately 1,07,677 sediment filter tanks, in the Chennai Corporation areas.

*SPORTS NEWS

🏀 Headingley Test: India VS England - 5th Day  thrill continues.

🏀 Javelin thrower Neeraj Chopra will feature in the prestigious Golden Spike tournament in Ostrava, Czech Republic.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.


பழமொழி :
Books open more doors than keys do.

புத்தகங்கள் திறக்காத கதவுகள் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

குழந்தை பருவத்தில்தான் சொர்க்கம் நம்மிடையே உள்ளது - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்


பொது அறிவு :

01.இந்தியாவின் புராண காலங்களில் தக்சண கங்கா என்று அழைக்கப்பட்ட நதியின் தற்போதைய பெயர் என்ன?

கோதவரி (Godavari)

02. இந்தியாவில் அமிர்தசரத்தில் உள்ள பொற்கோவிலை முழுமையாக கட்டி முடித்தவர் யார்?

குரு அர்ஜுன் தேவ்
(Guru Arjun dev)


English words & Tips :

attack    -     தாக்குதல்

allow         -       அனுமதி


Grammar Tips:

Difference between
I used to and I am used to,

1,I used to wake up early in the morning

2,I am used to waking up early in the morning
 
1 Describes something that regularly happens in the past but it does not happen now

2. Describe something that feel normal and familiar because it is not new anymore



அறிவியல் களஞ்சியம் :

செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜூன் 24

கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.



நீதிக்கதை

அன்பா, செல்வமா, வெற்றியா? எது சிறந்தது?

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ?‘ என்று கேட்டனர்.

தந்தை ‘வாருங்கள்’ என்றார்.

‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.

ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.

ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.

பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.

உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.

அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.

ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’.

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.


இன்றைய செய்திகள்

24.06.2025

⭐ தமிழ்நாடு அரசு
அறிவிப்பின்படி பூங்காவாக மாறுகிறது கிண்டி ரேஸ் கோர்ஸ்! ரூ.4,832 கோடி மதிப்பிலான இந்த நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்.

⭐பொது இடங்களில் போதுமான அளவு கழிப்பறைகளை அமைத்து, அவற்றை தரமாக பராமரிக்க வேண்டும்," என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.

⭐UPSC
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

⭐உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20% க்கும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் பாராளுமன்றம் அச்சுறுத்தியுள்ளது - இது எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 க்கு மேல் உயரக்கூடும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பிரயாக்ராஜில் (அலகாபாத்) முதல் முறையாக நடைபெறும் 20 வயதுக்குட்பட்ட தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 22 அன்று மேம்படுத்தப்பட்ட மதன் மோகன் மால்வியா மைதானத்தில் தொடங்கியது.

🏀கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 வரை நடைபெறும்.


Today's Headlines

✏ Tamil Nadu Government Announces Guindy Race Course to be converted into a park, A green park will be built on this land worth Rs. 4,832 crore.

✏ "The Madras High Court has instructed the Tamil Nadu government to construct sufficient number of toilets in public places and maintain them to a standard," it said.

✏ Tamil Nadu government announcement regarding UPSC Incentive of Rs. 25,000 for those who pass the first stage exam .

✏ Iran's parliament has threatened to close the Strait of Hormuz, which is crucial for more than 20% of global oil exports - a move that could send oil prices above $100 a barrel.

SPORTS NEWS
🏀 The first-ever National Junior Athletics Championship under 20 years of age in Prayagraj (Allahabad) began on June 22 at the upgraded Madan Mohan Malviya Stadium.

🏀 Led by captain Harmanpreet Kaur, with Smriti Mandhana as vice-captain, the Indian women's cricket team will play from June 28 to July 22.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

விளக்கம் : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.


பழமொழி :
Hitch your wagon to a star.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது . பழக்க வழக்கங்களை மாற்றலாம் . உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயம் எதிர்காலத்தை மாற்றும் - ஏ பி ஜே அப்துல் கலாம்.


பொது அறிவு :

01.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?

நாளந்தா பல்கலைக்கழகம்
பீகார்(Nalanda university- Bihar)

02. இந்தியாவின் கேப் கென்னடி என்று அழைக்கப்படும் இடம் எது?

ஸ்ரீஹரிகோட்டா-ஆந்திரபிரதேசம்

Sriharikota-Andarapradesh



English words & Tips :

alone     -      தனிமை

  ability    -       திறமை


Grammar Tips:

"At" and "in" are prepositions used to indicate location, but they differ in their specificity.
"In" is used for enclosed spaces or larger areas, like rooms, cities, or countries.
"at" is used for specific points or locations, like addresses or specific places like a bus stop or particular house



அறிவியல் களஞ்சியம் :

செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜூன் 23

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்

கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.



நீதிக்கதை

விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து வைத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்



இன்றைய செய்திகள்

23.06.2025

⭐புதிய மினி பஸ் சேவை திட்டத்தின் மூலம் 3,103 வழித்தடங்களில் போக்குவரத்து வசதி; தற்போது வரை 90,000 கிராமங்களை சேர்ந்த 1 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு தகவல்.

⭐ ஈரானிய அணுசக்தி நிலையங்கள் உட்பட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

⭐டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிளாட்பெக் களிமண் போட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நோலியா மந்தாவை 6-2, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து டீன் ஏஜ் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் தனது முதல் ITF ஜூனியர் பட்டத்தை வென்றார்.

🏀FIH ஹாக்கி புரோ லீக்கில் இன்று இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பெல்ஜியத்தை எதிர்கொள்கின்றன.

🏀பாரீஸ் டைமண்ட் போட்டியில்
88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

⭐ By new mini bus service project transport facilities are afforded to 3,103 routes till date. Up to 90,000 villages and  1 crore people are benefitted information by Tamil Nadu Government.

⭐In three nuclear power stations including  Iranian nuclear power stations    United States did the air strike.

⭐ Minister Avadi Nasar has  donated Rs.8000 in the bank accounts of people who were affected by Delhi house demolition.

⭐Maya Rajeshwaran, the first junior to defeat Switzerland's Noliya Manta by 6-2, 6-4 in the Gladbeck Kaliman competition and won her first IFT junior title.

⭐In FIH Hockey Pro League today Indian men and women facing the Belgium team.
Indian player Neeraj Chopra won the championship by throwing 88.16 meters in Javelin throw


Covai women ICT_போதிமரம்


G.O. No. 335, Dated 02.06.2017 - அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்கக் கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு

 

 G.O. No. 335, Dated 02.06.2017 - அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்கக் கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு


>>> அரசாணை எண் 335 - இறை வணக்கக் கூட்டம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசாணை (G.O.) எண் : 335, நாள் : 02-06-2017, பள்ளிகளில் காலை இறைவணக்கக் கூட்டங்களை அனைத்து வேலை நாட்களிலும் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இந்த அரசாணை, அனைத்து பள்ளிகளிலும் காலை இறைவணக்கக் கூட்டங்களை தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

இதன் முக்கிய அம்சங்கள்: 

அனைத்து வேலை நாட்களிலும்:

அரசாணை 335ன் படி, பள்ளிகளில் காலை இறைவணக்கக் கூட்டங்களை வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.

வழிகாட்டுதல்கள்:

இந்த அரசாணை, காலை இறைவணக்கக் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.

இறைவணக்கக் கூட்டம்:

இந்த அரசாணை, பள்ளி வேலை நாட்களில் இறைவணக்கக் கூட்டத்தை நடத்துவதை கட்டாயமாக்குகிறது.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்கம் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.


பழமொழி :
Kindness makes even intelligence beautiful.

நற்குணம் இருந்தால் அறிவும் அழகாகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

படைப்பில் பிரம்மாண்டமான படைப்பு நமது மனதுதான் . மனதை அழகுபடுத்துங்கள் , வாழ்க்கை அழகாகும். - புத்தர்


பொது அறிவு :

01.உலக அஞ்சலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 9 (October 9)

02. அடையாறு புற்றுநோய் மையத்தை ஏற்படுத்தியவர் யார்?

டாக்டர். முத்துலட்சுமி 
Dr.Muthulakshmi 


English words & Tips :

awful     -     மிக மோசமான

converse      -     உரையாடு


Grammar Tips :
Fish (one  fish)

Fish ( 3 or more when they are same type)

Fishes ( 3 or more fish when they are different type of fish)


அறிவியல் களஞ்சியம் :

மைக்ரோசாப்ட் உருவாக்கிய அரோரா AI, சூறாவளி மற்றும் மணல் புயல் உட்பட பல வானிலை நிகழ்வுகளை 91% துல்லியத்துடன் கணித்துள்ளது.


ஜூன் 20

கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.



நீதிக்கதை

துஷ்ட்டருக்கு அறிவுரை கூறக் கூடாது


ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்… ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள்

20.06.2025

⭐தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

⭐ தமிழ்நாடு அரசு வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

⭐ மத்திய கிழக்கு நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழி பாதையான 'ஹார்மோஸ் நீரிணை'யை மூடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

⭐பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான  குடிநீர் வழங்கும் வகையில் சென்னையில் ரூ.6.04 கோடியில் 50 குடிநீர் ஏடிஎம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லீட்ஸ் டெஸ்டுக்கு முன்னதாக எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் எதிர்நோக்குகிறார்.

🏀ஹாக்கிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, 2025 ஆம் ஆண்டு FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியை நடத்துவதற்காக ஹாக்கி இந்தியா தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


Today's Headlines

✏ Temperatures in Tamil Nadu to be above normal: Chennai Meteorological Department warns.

✏ Tamil Nadu government plans to go door to door and distribute ration items.

✏ Iran has announced that it will close the Strait of Hormuz, a key waterway that carries oil produced by Middle Eastern countries to world markets.

✏ Chief Minister M.K. Stalin inaugurated 50 drinking water ATMs in Chennai at a cost of Rs. 6.04 crore to provide free clean drinking water to the public.

SPORTS NEWS

🏀 Rishabh Pant looks forward to matching MS Dhoni's record ahead of Leeds Test.

🏀 In a major boost for hockey, Hockey India has signed a Memorandum of Understanding with the Tamil Nadu government to host the FIH Men's Junior World Cup Hockey in 2025.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS Updation - கருவூலத்துறை ஆணையர் & நிதித்துறை துணை செயலாளர் ஆய்வுக் கூட்ட கருத்துகள்

CPS Updation தொடர்பாக கருவூலத்துறை ஆணையர் மற்றும் நிதித்துறை துணை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட கருத்துக...