கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆன்லைன் ஆட்டோ சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஜனவரி 1 முதல் 5% ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் (From 01-01-2022, 5% GST will be levied on customers for online auto services)...

 


ஆன்லைன் ஆட்டோ சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஜனவரி 1 முதல் 5% ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் (From 01-01-2022, 5% GST will be levied on customers for online auto services).


நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது.


ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் ஆப்லைனிலோ அல்லது நேரிலோ ஆட்டோ சேவையைப் பெறுவதற்கு இந்த வரி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் Ola,Uber போன்ற ஆட்டோ சேவைகளின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் சுமையாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...